208. | தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும் | | மடங்கொன் றறிவகற்றுங் கல்வி - நெடுங்காமம் | | முற்பயக்குச் சின்னீர வின்பத்தின் முற்றிழாய் | | பிற்பயக்கும் பீழை பெரிது. |
209. | கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச் | | செல்வப் புதல்வனே யீர்ங்கவியாச் - சொல்வளம் | | மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்தும் | | செல்வமு முண்டு சிலர்க்கு. |
யும் - கவலை வந்த விடத்தும்; கவல் - கவலை; முதனிலைத் தொழிற் பெயர் (மணி பதிகம், 52.) கை கொடுக்கும் - துணை புரியும். கல்வியின் ஊங்கு - கல்வியைக் காட்டிலும் சிறப்பாக; ஊங்கு - மிகுதி. ஊங்குத் துணை இல்லை. உயிரை அணுவென்னும் மரபுபற்றிச் சிற்றுயிரென்றார்.
208. கல்வியின் உயர்வும் காமத்தின் இழிவும் கூறப்படும்.
கல்வி: எழுவாய். மடம் கொன்று - அறியாமையை ஒழித்து. அறிவு அகற்றும் - அறிவை விரிவு படுத்தும்; “அறிவகற்றும், ஆகலூ ழுள்ளக் கடை” (குறள், 372); “நாடுகண் ணகற்றிய வுதியஞ் சேரல்” (அகநா. 65 : 5.) சின்னீர இன்பம்: சின்மை காலச்சிறுமையைக் குறித்தது. இன்பத்தின் - இன்பத்தைக் காட்டிலும், முற்றிழாய்: மகடூஉ முன்னிலை; நீதிநூல் செய்யும் ஆசிரியர் மகடூஉவை மன்னிலைப்படுத்திக் கூறுதல் மரபு (மகடூஉ - பெண்); நாலடியார் முதலியவற்றிற் பார்க்க. பீழை - துன்பமு: பீடையென்னும் வடமொழிச் சிதைவு; நாடிகா வென்றது நாழிகை யென்று வந்தாற்போல.
ஆதலின் காம இன்பத்தினும் கல்வியின்பமே கோடற்குரிய தென்றவாறு.
209. கல்வி, கவித்துவம், பாடங்கூறும் வன்மை, சொல் வன்மை என்பன ஒன்றைக் காட்டிலும் ஒன்று சிறப்புடையன வென்று கூறுகின்றார்.
கற்புடைப் பெண்டிரென்றார் எழுமையும் தொடர்ந்து வருதலின்; பெண்டிர் - மனைவி; கல்வியைப் பெண்டிராக்கியது அதற்குரிய வடசொல்லாகிய வித்யாவென்பது பெண்பாற் சொல்லாதல் பற்றி; “நாணென்னும் நல்லாள்” (குறள், 924) என்பதனாலும் அதனுரையாலும் இத்தகைய வழக்கை அறிக. ஈர்ங்கவி - ஈரமுடைய கவி; ஈரம் - இங்கே இன்பம். சொல்வளம் - தாம் கற்றறிந்தவற்றைப் பிறருக்குச் சொல்லும் சிறப்பு; என்றது பாடக்கூறுதல். மல்லலை - வளப்பம். வெறுக்கை - செல்வம். மாண் அவை - மாட்சிமிக்க சபை; என்பது நல்லவை, நிறையவைகளை; அவற்றின் இலக்கணம், “ஆறுட் பகைசெற்றருங்கலை யோர்ந்து, பாரிற்
|