210. | எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந் | | துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்தணர்ந்தும் | | சொல்வன்மை யின்றெனி னென்னாகு மஃதுண்டேற் | | |
211. | அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார் | | அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி | | ஈத்துண்ணார் செல்வமு நலைகூர்ந்தா ரின்னலமும் | | |
கீர்த்தி படைத்தோர் வைகுதல், நல்லவை யடக்கம் வாய்மை நடுநிலை, சொல்லு நன்மை யுடையோர் தொகைஇ. வல்லார் மொழியினும் வல்லுந ராக்கிக், கேட்போ ருறையவை நிறையவை யாகும்” (இ-வி. 936) என்பதனால் விளங்கும். மண்ணுறுத்துஞ் செல்வம் - அழகுறச் செய்யும் சொல்வன்மையாகிய செல்வம். சொல்வள மென்றது அறிய விரும்பியவருக்கு உரைக்கும் வன்மை; பின்னர்க் கூறியது அறிஞர்கள் நிறைந்த அவையிற் பேசும் வன்மையை. செல்வமும்: உம்மை, உயர்வு சிறப்பு.
210. இதனாற் சொல்வன்மையின் சிறப்புக் கூறுகின்றார்.
கல்வி பலவகைப்படுதலின் எத்துணையவெனப் பன்மையாற் கூறினார் இடமறிந்து - நூல்களில் நுண்மையும் பொருளாழமும் உடைய இடங்களை அறிந்து. உய்த்துணர்வு - மதி நுட்பத்தால் ஆராய்ந்து அறிதல். இல் ஆகும் - கல்வியின் பயன் இல்லையாகும். கல்வியும் உய்த்துணர்வும் ஒருங்கு வேண்டுமென்கிறார்; “மதி நுட்ப நூலோ டுடையார்” (குறள், 636) என்றார் திருவள்ளுவரும். சொல் வன்மை - தாம் கற்றவற்றைப் பிறர் அறியும் வண்ணம் கூறும் திறமை. இன்றெனின் என் ஆகும் - இல்லையானால் அவ்வுய்த்துணரும் திறமையும் என்ன பயனையுடையதாகும்? (பி-ம்.) ‘என்னாம்’. பொன்மலர் நாற்றம் உடைத்து - அச்சொல்வன்மை நறுமணத்தைப் பெற்ற பொன்மலரைப் போன்ற தன்மையை உடையது; யாவற்றினும் சிறந்ததென்றபடி.
211. இன்னது இன்னாரிடத்தில் இருந்தும் பயனில்லை யென்று கூறுகின்றார்.
மெய் விதிர்ப்பார் - உடல் நடுங்குவார். ஆகுலச் சொல் - பொருளற்றனவான ஆரவாரச் சொற்கள். நவை அஞ்சி - செய்யத் தக்கவற்றைச் செய்யாமையாகிய குற்றம் நேர்தலை அஞ்சி. ஈத்துண்ணார் - பிறருக்கு அளித்து எஞ்சியவற்றை உண்ணாதவர். ஈத்தென்றது உண்ணாரென்பதன் முதனிலையோடு முடிந்தது. இல் நலம் - இல் வாழ்க்கையின் நன்மை. பூத்தலிற் பூவாமை நன்று - உண்டாதலைக்காட்டிலும் இல்லாதிருத்தல் நன்று.
|