214. | வருந்தித்தாங் கற்றன வோம்பாது மற்றும் | | பரிந்துசில கற்பன் றொடங்கல் - கருந்தனம் | | கைத்தலத்த வுழ்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங் | | கெய்த்துப் பொருள்செய் திடல். |
215. | எனைத்துணைய வேனு மிலம்பாட்டார் கல்வி | | தினைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம் - மனைத்தக்காள் | | மாண்பில ளாயின் மணமக னல்லறம் | | |
216. | இன்சொல்லன் றாய்நடைய னாயினுமொன் றில்லானேல் | | வன்சொல்லி னல்லது வாய்திறவா - என்சொலினும் | | கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடம்ஞாலம் | | |
214. புதியவற்றைக் கற்றலினும் கற்றவற்றைப் பாதுகாத்தல் சிறந்ததென்பர்.
ஓம்பாது - சிந்தித்தல் முதலியவற்றாற் பாதுகாவாமல். பரிந்து - வருந்தி. கருந்தனம் - பெரும்பொருள். கைத்தலத்தனவாகிய கருந்தனத்தை; கருமை - பெருமை. உய்த்துச் சொரிந்திட்டு - மதியாமற் போகவிட்டுவிட்டு. அரிப்பரித்தல் - கடைவீதி முதலிய இடங்களில் உள்ள புழுதியை ஏதேனும் சிறு பொருள் கிடைப்பது கருதிப் பல நேரம் கொழித்தல்; இதனைச் செய்வார் அரிப்பரென்று வழங்கப்படுவர். எய்த்து - வருந்தி. “மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை” (முதுமொழிக். 1:3); “படியில் கல்வி விரும்பினோன் பாடம் போற்று மதுபோல” (பிரபு. மாயையுற்பத்தி. 49.)
215.இதனால் வறுமையாறர் கல்வி சிறப்படையாதென்கின்றார்.
எனைத்துணையவேனும் - எவ்வளவு பெருக்கத்தை உடையனவாயினும். இலம்பாட்டார் - வறுமையை யுடையார். சீர்ப்பாடு - சிறப்புண்டாதல்; “வறுமையிற் கல்வி போலப், புலப்படா மருங்கு னல்லார்” (திருவிளை. 4:58.) மனைத்தக்காள் - மனைவி; மாண்பு - நற்குண நற்செய்கை; “மனைத்தக்க மாண்புடையளாகி” (குறள். 51) மணமகன் - அம்மனைவியின் கணவன். நல்லறம் பூண்ட - மேற்கொண்டனவாகிய நல்லறங்கள். புலப்படாபோல் - வெளிப்படாமைபோல.
216.பொருளின்பால் உலகத்தாருக்குள்ள மதிப்பைக் கூறுகின்றார்.
தாழ்நடையன் - பணிந்த ஒழுக்கத்தை யுடையவன். வன்சொல்லின் அல்லது வாய் திறவா - வன்சொல்லைக் கூறுவதற்கன்றிப் பிற சொற்களைக் கூற வாயைத் திறவா; ஞாலம் திறவா; ஞாலம் - உலகத்திலுள்ள உயிர்கள்: ஆகுபெயர். என் சொலினும் - எத்தகைய கடுஞ்சொற்களைக் கூறினும். கைத்துடையான் - பொருளுடையவனது. காற்கீழ் ஒதுங்கும்: அடிமைத்
|