பக்கம் எண் :

நீதி நெறி விளக்கம்183

217.
இவறன்மை கண்டு முடையாரை யாரும்
குறையிரந்துங் குற்றேவல் செய்ப பெரிதுந்தாம்
முற்பக னோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
கற்பன்றே கல்லாமை யன்று.    
(11)

218.
கற்றார்க்குக் கல்வி நலனே லனல்லால்
மற்றோ ரணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக் கழகுசெய் வார்.    
(12)

அடிமைத் தொழில் செய்வர் என்றபடி. முன்னர்ப் பொருளில்லாவனை இன்சோல்லன் தாழ்நடையனென்று கூறியவற்றிற்கு மறுதலையாக இங்கே கைத்துயானுக்கு வன்சொல்லன் மீதூர்ந்த நடையினனாயினும் என்பவற்றை வருவித்துப் பொருளுரைக்க. ஞாலமே பித்துடைய: பிற பித்துடையவல்ல; பிற - பித்துடையனவாக்க் கருதப்படும் பிற உயிர்கள்; “கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும், அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே, நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய, மாட்டா பவன்ன் மரம்” என்றது இங்கே நினைவுக்கு வருகின்றது. இரண்டாவது பொருள்: பித்துடைய அல்ல - நல்ல அறிவுடையனவே; என்றது புகழ்வது போலப் பழித்தபடி. இப்பொருளுக்குப் பிறவென்பதை அசைநிலையாக்கொள்க.

    217. உலோபியராயினும் செல்வரை உலகம் பாராட்டுமென்பர்.

    இவறன்மை - உலோபத்தை. உடையாரை - பொருளுடையவரை. குறையிரந்தும் - தாமே வலியச் சென்று இரந்தும். குற்றேவல் - சிறிய ஏவல்களை. அவர் வேண்டாமே தாமே சென்று ஏவல் புரிவர்; (நாலடி. 337.) ‘இஃது அறியாமை யல்லவா?’ என்று கேட்போருக்கு விடையிறுப்பார் போன்று அதற்கு ஒரு காரணம் கற்பிக்கின்றார் ஆசிரியர். முற்பகல் நிலாதார் - முற்பிறவிகளில் தவஞ்செய்யாதார்; முற்பகல் - முன்நாள்; இங்கே முற்பிறவியைக் குறித்தது; பகல்: ஆகுபெயர். முற்பிறப்பில் தவஞ்செய்யாதார், செல்வமின்றி இப்பிறப்பில் வறியராயினவர். நோற்றார் - இப்பிறப்பில் செல்வம் பெறுவதற்கேற்ற தவத்தை முற்பிறப்பிற் செய்தவர். “இலர்பல ராகிய காரண நோற்பார், சிலர்பலர் நோலா தவர்” (குறள், 270.) கற்பு அன்றே - கல்வியறிவு அன்றோ? தவம் புரிந்தாரைத் தவம் புரியார் வழிபடல் கல்வியறிவின் பயனன்றோ வென்றபடி. இங்ஙனம் இருப்பவும் இதனைக் கல்லாமையின் பயனென்று கூறுதல் பிழையென்றார்.

    இஃது உலோபியரைப் புகழ்வதுபோலப் பழித்தபடி.

    218. கல்வியழகே அழகென்கின்றார்.