பக்கம் எண் :

2
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

5. கனாதியா யைந்தொழிற்கு மப்புறமா யன்றே
மனாதிகளுக் கெட்டா வடிவாய்த் - தனாதருளின்
6. பஞ்சவித ரூப பரசுகமா யெவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்குந் தனிப்பொருளாய் - எஞ்சாத
7. பூரணமாய் நிந்தமாய்ப் போக்குவர வும்பணர்வும்
காரணமு மில்லாக் கதியாகித் - தாரணியில்
8. இந்திரசா லம்புரிவோன் யாவரையுந் தான்மயக்கும்
தந்திரத்திற் சாராது சார்வதுபோல் - முந்தும்
9. கருவின்றி நின்ற கருவா யருளே
உருவின்றி நின்ற வுருவாய்த் - திரிகரணம்
10. ஆகவரு மிச்சை யறிவியற்ற லாலிலய
போகவதி காரப் பொருளாகி - ஏகத்
11. துருவு மருவு முருவருவு மாகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
12. மோம்முறும் பல்லுயிர்க்கு முத்தியளித் தற்குமல்
பாகமுற வேகடைக்கண் பாலித்துத் - தேகமுறத்
5. மனாதிகளுக்கு - மனம் முதலிய கரணங்களுக்கு.
6. பஞ்சவித ரூபம் - பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐவருருவம்; “ஐந்தொழிற்கும், நீங்காத பேருருவாய் நின்றோனே” என்பர் பின்; 59. தஞ்சம் - பற்றுக்கோடு, எஞ்சாத - குறையாத.
7. புணர்வு - சம்பந்தம்; “போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே” (திருவாசகம் - சிவபுராணம்.)
8. கருவின்றி நின்ற கரு - ஸ்வயம்பு; “கருவுனா லன்றியே கருவெலா மாயவன்” (தென்குடித் திட்டைத் தேவாரம்) அருளே உருவாய்; “கருணை திருவுருவாய்” என்பர் பின்; 24.
9-10. திருகரணம் ஆகவரும் இச்சை அறிவு இயற்றல்: “கண்ட சத்திமூன்றுட் கரணமாய்” என்பர் பின்; 63. இச்சை அறிவு இயற்றல் - இச்சா ஞானக் கிரியாசத்திகள்; இச்சை செயலறிவு” (35) இலயம்-ஒன்றுதல், போகம் - துய்த்தல். அதிகாரம் - தொழில் புரிதல், இச்சை முதலியவற்றின் இயல்புகளை, சிவஞான சித்தியார் 1-ஆம் சூத்திரத்து 63-ஆம் செய்யுளாலும் அதன் உரையாலும் உணரலாகும். போகம் - துய்த்தல்.
11. உரு - உருவத் திருமேனி நான்கு; அரு - அருவத்திருமேனி நான்கு; உருவரு - அருவுருவத் திருமேனி ஒன்று; இவற்றை நவந்தரு