|
|
|
13. |
தந்த வருவுருவஞ் சார்ந்தவிந்து மோகினிமான் |
|
பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல் |
|
|
14. |
ஆறத்து வாவுமண்டத் தார்ந்தவத்து வாக்களுமுற் |
|
கூறத் தகுஞ்சிமிழ்ப்பிற் கூட்டுவித்து - மாறிவரும் |
|
|
15. |
ஈரிரண்டு தோற்றத் தெழுபிறப்புள் யோனியெண்பான் |
|
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய |
|
|
16. |
கன்மத்துக் கீடாய்க் கறங்குஞ் சகடமும்போற் |
|
சென்மித் துழலத் திரோதித்து - வெந்நிரய் |
17. |
சொர்க்காதி போகமெலாந் துய்ப்பித்துப் பக்குவத்தால் |
|
நற்கா ரணஞ்சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
|
|
|
|
|
பேதமென்பர், பருவ வடிவம் - அடியார்களின்
பக்குவத்திற்கேற்பக் கொள்ளப்படும் திருவுருவங்கள். |
|
13. விந்து - சுத்த மாயை; குடிலையெனவும் வழங்கும்.
மோகினி - அசுத்த மாயை, மான் - பிரகிருதி மாயை (478). பெந்தம் - கட்டு. |
|
13-14. மந்த்ர முதலி ஆறு அத்துவா - மந்திராத்துவா, பதாத்துவா,
வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா; 60-62-ஆம் கண்ணிகளைப்
பார்க்க; அத்துவா - வழி அண்டத்தார்ந்த அத்துவாவெனத் தனியே பிரித்துக்
கூறினமையின் முற்கூறிய ஆறத்துவாவும் பிண்டத்திலுள்ளன வெனக் கொள்க.
(பிண்டம்-சரீரம்) சிமிழ்ப்பு-கட்டு; சிவஞானசித்தியார் சூ. 8: 7-9, உரையைப்
பார்க்க. (பி - ம்.) ‘உட்கூறத் தகும்.
|
|
15. ஈரிரண்டு தோற்றம் - நான்கு வகையான பிறப்பு; முட்டையிற்
பிறப்பனவாகிய அண்டசம, வேர்வையிற் பிறப்பனவாகிய சுவேதசம்,. வித்திற்
பிறப்பனவாகிய உற்பீசம், கருவிற் பிறப்பனவாகிய சராயுச மென்பன. எழுபிறப்பு -
நிற்பன, நெளிவன, தத்துவன, தவழ்வன, நடப்பன, கிடப்பன, பறப்பன என்பனவாம் (463).
யோனி யெண்பான் ஆர வந்த நான்கு நூறாயிரம் - எண்பத்து நான்கு லட்சம் யோனி
பேதங்கள்; “உரைசேரு மெண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனி பேதம்” (திருஞா. தே.);
“ஊர்வ பதினொன்றா மொன்பது மானிடம், நீர் பறவை நாற்காலோர் பப்பத்தாம் - சீரிய,
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த, அந்தமில்சீர்த் தாவரநா லைந்து” என்ற
பழஞ்செய்யுள் எழுவகைப் பிறப்பின் வகையையும் தொகையையும் தெரிவித்தல் காண்க.
தீர்வரிய - அனுபவித்தாலன்றித் தீர்தற்கரிய. |
|
16. ஈடாய் - வயப்பட்டு, கறங்கு - காற்றாடி. சகடம் - வண்டியின்
சக்கரம். சென்மித்து - பிறந்து. “ஆடுங் கறங்குந் திரிகையும் போல வலைந்தலைந்து”
(தாயுமானவர் பாடல்.) திரோதித்து - மறைத்து, நிரயம் - நரகம்.
|