| 19. சரியை கிரியா யோகம் - சரியையும் கிரியையும், யோகமும். |
|
18-9. “புறச்சமய நெறிநின்றும்” (சிவஞான சித்தியார், சுபக்கம், சூ.
8:11) என்னுந் திருவிருத்தத்தால் இக்கண்ணிகளின் கருத்து விளங்கும்.
|
|
20. புசிப்பித்து - அனுபவிக்கச் செய்து. ஆலோகம் - தெளிந்த அறிவு.
அகற்றுவித்து - விரிவடையச் செய்து. ஆலோகம் என்பதை அலோகமென்பதன்
விகாரமெனக்கொண்டு ஆலோகந்தன்னை யகற்று வித்தென்பதற்கு அழியாமையை நீக்கியெனப்
பொருள் கோடலும் ஆம்; அலோகம் - அறியாமை. |
|
20-21. சத்தி நிபாதம் - சத்தி பதிதல். நால்வகையாம் சத்திநிபாதம் -
மந்ததரம்,மந்தம்,தீவிரம், தீவிரதரமென்ற நான்குவகைப் பக்குவங்கள்; “பித்திது
வெனப்பிறர் நகைக்கவரு நாலாம், சத்தி பதிய” (திருவிளை.வாதவூரடிகளுக்குபதேசித்த
படலம், 31.) இருவினையும் ஒத்துவருங்காலம் - இருவினை யொப்பு உண்டாகுங் காலம்;
“வினை யொத்தபின், கணக்கிலாத்திருக்கோல நீவந்து காட்டி னாய்கழுக்குன்றிலே” என்பது
திருவாசகம் பெத்தம் கட்டு.
|
|
22. மலபரிபாகம் - மலம் அழிதற்குரிய பக்குவநிலை. அலமுருதல் -
சுழலுதல்.
|
|
23. பிறியா - பிரியாத
|
|
24. காசினிக்கே - பூமியில்; உருபு மயக்கம். சிவபெருமானே குருபரனாகி
எழுந்தருளி அருளுவரென்பது ஆகமநூற்றுணிபு; “ அருபரத்தொருவ னவனியில் வந்து,
குருபர னாகி யரிளிய பெருமையை” (திருவாசகம் - போற்றித் திருவகவல்) திருநோக்கால்
- சக்ஷுதீக்ஷையால்.
|