25. | ஊழ்வினையைப் போக்கி யுடலறுபத் தெட்டுநிலம் | | ஏழுமத்து வாக்க ளிருமூன்றும் - பாழாக | 26. | ஆணவ மான படலங் கிழித்தறிவிற் | | காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் | 27. | அடிஞானத் தாற்பொருளு மான்மாவுங் காட்டிக் | | கடியார் புவனமுற்றுங் காட்டி - முடியாது | 28. | தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகியெங்கும் | | நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் | 29. | வரவு நினைப்பு மறப்பும் பகலும் | | இரவுங் கடந்துலவா வின்பம் - மருவுவித்துக் | 30. | கன்மமலத் தாரக்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சாடையும் | | வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் | 31. | பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளிவெற்பில் | | வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த |
25. ஊழ்வினை - இங்கே சஞ்சிதம்,உடல் அறுபத்தெட்டும் தூல தேகக்கருவிகள் அறுபதும் சூக்கும தேகக்கருவிகள் எட்டும். நிலம் ஏழும் - ஆதாரம் ஆறும் அதற்கு மேலுள்ள சூனியாகாசமும்; “ஆதியாதார மாதி யடுக்கெனப் பன்னி றத்த, சோதியேழ் நிலைகள்”, எந்நிலங்களினு மிக்க வெழுநிலம்” எனப் பிறரும் கூறுதல் காண்க.
26. ஆணவம் - ஆணவ மலம், படலம் - கண்ணொளியை மறைப்பதொரு நோய்; “ஞானக்கண் காட்டி” எனக் கூறுதலால் “படலங் கிழித்து” என்கிறார்.
30. கன்ம மலத்தார் - பிரளயாகலர்.
30-31. மின் இடத்துப் பூத்த - ஒருமின் இடப்பக்கத்திலே தோன்றிய; மின் என்றது உமாதேவியாரை. மலர்க்கண் மூன்றும் .............வடிவாகி; முருகக் கடவுளும் சிவபிரானும் வேறல்லராகலின் இங்கே இவ்வாறு கூறப்பட்டது; இதனை, “செறியும் பரமசிவமாய்”, ஐந்தெழுத்தைக் கூறி நடாத்துங் கூரகதமும்”. “ஐந்து முகத்தோ டதோமுகமுந் தந்து .....................உய்ப்ப” (4, 69, 76-7), “ஆதலி னமது சக்தி யறிமுக னவனும் யாமும், பேதக மன்றானம்போற் பிரிவிளன் யாண்டு நின்றான்” (கந்த. திருவிளை. 19.) என்பவற்றாலும் உணரலாகும். மூத்த - அநாதி காலமாகத் தொடர்ந்த, கன்ம மலத்தார்க்கு .................விடைமேல் ...................... வடிவாகி: “ஏற்றுக்,
|