32. | கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துண்ணின் | | றொருமலத்தார்க் கின்ப முதவிப் - பெருகியெழு | 33. | மூன்றவத்தை யுங்கழற்றி முத்தருட னேயிருத்தி | | ஆன்றபர முத்தி யடைவித்துத் - தோன்றவரும் | 34. | யானெனதென் றற்ற விடமே திருவடியா | | மோனபரா னந்த முடியாக - ஞானம் | 35. | திருவுருவா விச்சை செயலறிவு கண்ணா | | அருளதுவே செங்கை யலரா - இருநிலமே | 36. | சந்தியா நிற்குந் தனிச்சுடரே யெவ்வுயிர்க்கும் | | பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் | 37. | தோய்ந்தநவ ரத்நச் சுடற்மணியாற் செய்தபைம்பொன் | | வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் | 38. | துண்டமிரு மூன்றுநிரை தோன்றப் பதிதனைய | | புண்டரம் பூத்துநுதற் பொட்டழகும் - விண்ட |
குன்றுளே யிருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி” (திருவிளை, கடவுள்.)
32. ஒரு மலத்தார் - விஞ்ஞானாகலர், ஒரு மலத்தார்க்கு உள் நின்று இன்பம் உதவியெனக் கூட்டுக; “வென்றுளே புலன்களைந்தார் மெய்யுண ருள்ளந் தோறும், சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி” (திருவிளை.கடவுள்.)
33. மூன்றவத்தை - கேவலாவத்தை, சகலாவத்தை, சுத்தாவத்தை. முத்தர் - மலங்களினின்றும் விடுபட்டவர்.
34. யான் எனது - அகங்கார மமகாரங்கள்; “யானெனதென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்” (குறள், 346.)
34-5. ஞானம் திரு உருவா: “நீயான ஞான வினோதம்” (கந்தரலங்காரம்;) “ஆணவ மகன்ற சுத்த வறிவல்லா லுருவ மில்லாத், தாணு” (திருவானைக்காப். கடவுள்,) இச்சை செயல் அறிவு - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி.
36. எவ்வுயிர்க்கும் - எவ்வுயிரிடத்திலும், பின்னம் - வேறுபாடு.
37 - 57. இக்கண்ணிகளில் முருகக் கடவுளுடைய திருவுருவ வர்ணனை கூறப்படும்.
38. நிரை தோன்ற - வரிசையாகத் தோன்றும்படி, துண்டமாகிய ஆறு பிறைகளை வரிசையாக்ப் பதித்தாற் போன்ற புண்டரங்கள்: பிறை
|