பக்கம் எண் :

20குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

    முடிபு: போதம் முதலியன (2) ஆகிப் பாலித்தல் முதலியன (12) செய்து (33) இடம் முதலியன திருவடி முதலியனவாக (34) நிற்கும் தனிச் சுடரே, பெருமானே (36), மணிமுடி முதலியவற்றை (37) உளந்தனிற் கண்டு (57) ஆதரிப்போர்க்கு உயிராய் இருக்கும் ஒளியே (58), நின்றோனே (59), மந்திரம் முதலியன சோரி முதலியனவாக (60) நின்றோய் (62), கோவே (64), வாழ்வே, தவமே (65), இன்பப் பொருப்பு முதலியவற்றைத் (66) தசாங்கமெனப் பெற்றோனே (74), பரஞ்சோதி (75) உய்ப்ப (77) அளிப்ப (79), உய்ப்ப (80), உய்ப்பத் திருவுருவாய் (81) விளையாடி (82) உயர்ந்தோனே (86), நாதா (90), கோமானே (92), மொழிந்தோனே (93), விடுத்தோனே (94), விடுத்தோனே (97), முடித்தோய் (99), வேலோய் (100), இளையோனே (102), மேலோனே (103), தேவே (104) செய்தோனே (105), மணந்தோனே (108), குடிகொண்டோனே (109), செவ்வேளே (110), சென்மப்பகை முதலியன (111), எதிர்ந்தாலும் (113) மயில்வாகனம் முதலியன (114) எதிர்தோன்ற வந்து (116) உளத்திருந்து (117) நாற்கவி முதலியன (118) தோய்ந்து பழுத்த புலமை பாலித்து (119) அகற்றி, மோசித்துக் (120) கூட்டித்துய்ப்பித்துக் (121) காட்டி ஆட் கொண்டு முன்னின்று அருள் (122).