மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
(ஆசிரிய விருத்தம்) 2. | கார்கொண்ட கவுண்மதக் கடைவெள்ள முங்கட் | | கடைக்கடைக் கனலுமெல்லை | | கடவாது தடவுக் குழைச்செவி முகந்தெறி | | கடைக்கா றிரட்டவெங்கோன் | | போர்கொண்ட வெண்டோட் பொலங்குவடு பொதியும்வெண் | | பொடிதுடி யடித்துவைத்துப் | | புழுதியாட் டயராவொ ரயிராவ ணத்துலவு | | போர்க்களிற் றைத்துதிப்பாம் |
2. (அடி, 1) கார்கொண்ட மதம்: கார் - கருமை; மதம் கரிய நிறம் உடையது; “கருங்கட மூன்றுகு நால்வாய்க் கரி” (திருச்சிற். 55) கவுள் - கன்னம். மதக்கடை வெள்ளம் - மதமாகிய பிரளய காலத்து வெள்ளம். கட்கடைக் கடைக்கனலும் - கண்ணின் கடையிலே தோன்றும் பிரளய காலத்து அக்கினியும், மதமும் கண்ணிலுள்ள சினத்தீயும் மிகுதி பற்றிக் கடைவெள்ளமாகவும் கடைக்கனலாகவும் உருவகிக்கப்பெற்றன; கடை - யுகமுடிவு, தடவுச்செவி, குழைச்செவி; தடவு - பெருமை; குழை - இலை; இங்கே தாமரை இலை; யானைச் செவிக்குத் தாமரையிலை உவமை; அகநா. 176. கடைக்கால் - யுகாந்த காலத்துக் காற்று; இதுவும் மிகுதி பற்றி இங்ஙனம் கூறப்பட்டது. திரட்ட - புறத்தே பரவாமல் தொகுக்க; தடுக்கவென்றபடி . எங்கோன் - சிவபெருமான்.
(2) எண்டோளாகிய பொலங்குவடு; பொலங்குவடு - மேருமலை. (பி-ம்) ‘பொலன்குவடு’. பொதியும் - மறைத்த. வெண்பொடி - திருநீற்றை. துடியடி - உடுக்கையைப்போன்ற அடியினால்; விநாயகருக்குத் துடியடி யின்றேனும் யானைக்கன்றென்னும் பொதுமைபற்றிக் கூறினார். “மும்மதத்தன்” (சிவஞான. காப்பு) என்றதுபோல. புழுதியாட்டு அயரா - புழுதியில் விளையாடுதலைச் செய்து; இது யானைக்கு இயல்பு. அயிராவணத்து - அயிராவணமென்னும் யானையைப்போல; அயிராவணம் ஈராயிரங் கொம்பையுடையதும் சிவபெருமானுக்குரியதுமாகிய தொருவெள்ளையானை. விநாயகர் திருநீற்றை அளைந்து மேனி முழுதும் வெண்ணிறம் பெற்றமையின் அயிராவணம் உவமை கூறப்பட்டது. களிறு - விநாயகர்.
(1-2) கடைக்கால் கடைவெள்ளத்தையும் கடைக்கனலையும் கடவாது, திரட்ட, துவைத்து அயரா உலவு களிற்றைத் துதிப்பாம் என்க.
|