| தார்கொண்ட மதிமுடி யொருத்தன் றிருக்கண்மலர் | | சாத்தக் கிளர்ந்துபொங்கித் | | தவழுமிள வெயிலுமழ நிலவுமள வளவலாற் | | றண்ணென்று வெச்சென்றுபொன் | | வார்கொண் டணந்தமுலை மலைவல்லி கர்ப்பூர | | வல்லியபி ராமவல்லி | | மாணிக்க வல்லிமர கதவல்லி யபிடேக | | வல்லிசொற் றமிழ்தழையவே. |
1. காப்புப் பருவம்
3. | மணிகொண்ட நெடுநேமி வலயஞ் சுமந்தாற்று | | மாசுணச் சூட்டுமோட்டு | | மால்களிறு பிடர்வைத்த வளரொளி விமானத்து | | வாலுளை மடங்கறாங்கும் |
(3) தார்கொண்ட மதி - தாராகக் கொண்ட சந்திரன்; இங்கே தாரென்றது கண்ணியை; “தாரென்ன வோங்குஞ் சடை முடி மேற்றனித் திங்கள் வைத்த” (திருச்சிற். 56) மதி - பிறை. தார் - பூவுமாம்; “மேகமோடோடு தங்கண் மலராவணிந்து” (தே.) திருக்கண்மலர் சூரியனும் சந்திரனுமாதலால் இளவெயிலும் நிலவும் அளவளாவின. வெச்சென்று - வெம்மையுடையதாகி; “தண்ணெனவும் வெச்செனவுந் தந்து” (சேது. கடவுள்) “தண்ணெனவும் வெச்செனவுந் தாராதே” (வருணகுலாதித்தன் மடல்.) (பி-ம்.) ‘மழவெயிலு மிளநிலவும்.’
(4) வார் - கச்சு, அணந்த - மேல் நோக்கிய: (பி-ம்.) ;அணிந்த;’கர்ப்பூரசுந்தரென்பது சோமசுந்தரக்கடவுளுக்குரியதொரு திருநாமம்; அதற்கேற்ப அங்கயற்கணம்மைக்குக் கர்ப்பூர வல்லி யென்னும் திருநாமம் உண்டாயிற்று; “கர்ப்பூர வல்லி தலை கவிழ்ந்து நிற்ப’ (108) அபிராமவல்லி - பேரழகையுடைய கொடி போல்வாள். மாணிக்கவல்லி - மாணிக்கக் கொடிபோல்வாள், மரகதவல்லி - மரகதக் கொடிபோல்வாள், அபிடேகவல்லி - திருமுடியையுடையவள்: “அம்பொன்முடி முடிசூடு மபிடேக வல்லி யொடும்” (105.) சொற்றமிழ் - புகழையுடைய தமிழ் நூல்: இங்கே பிள்ளைத் தமிழ். (முடிபு.) தமிழ் தழையக் களிற்றைத் துதிப்பாம்.
3. (அடி, 1) மணி - முத்து முதலிய ரத்தினங்கள். நெடுநேமி - ஆழமாகிய கடல். நேமிசூழ்ந்த வலயம்: பூமி. சுமந்தாற்றும் - சுமக்கும்; “ஒறுத்தாற்றும்” (குறள், 579, பரிமேல்.) மாசுணச்சூட்டு மோட்டு மால் களிறு பிடர்வைத்த - ஆதிசேடனுடைய தலையினுச்சியில் பெருமையையும்
|