பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்23

அணிகொண்ட பீடிகையி னம்பொன்முடி முடிவைத்தெம்
   ஐயனொடு வீற்றிருந்த
அங்கயற் கண்ணமுதை மங்கையர்க் கரசியையெம்
   அம்மனையை யினிதுகாக்க

கணிகொண்ட தண்டுழாய்க் காடலைத் தோடுதேங்
   கலுழிபாய்ந் தளறு செய்யக்
கழனிபடு நடவையிற் கமலத் தணங்கரசொர்
   கையணை முகந்துசெல்லப்

பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப்
   பணைத்தோ ளெருத்தலைப்பப்
பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
   பச்சைப் பசுங்கொண்டலே.
(1)

மயக்கத்தையும் உடைய களிறுகள் தம் கழுத்திலே வைத்த. விமானம் - இந்திர விமானம். வால் உளை மடங்கல் - வெள்ளிய பிடரிமயிரையுடைய சிங்கம்.

    (2) பீடிகை - ஆசனம். இந்திர விமானம் ஆதிசேடனாலும் எட்டுத் திக்கயங்களாலும் முப்பத்திரண்டு சிங்கங்களாலும் அறுபத்து நான்கு கணங்களாலும் தாங்கப்படுவதென்பர். (திருவிளை. 1:83.) என் ஐயன் - சுந்தரேசுவரர், அங்கயற்கண்ணமுதை - மீனாட்சியம்மையை. அம்மனை - தாய்.

    (3) கணி - கண்ணி. இடைக்குறை. துழாய்க்காடு திருமால்திருமார்பில்அணிந்ததுளவத்தொகுதி, தேங்கலுழி - தேனின் வெள்ளம். காட்டை அலைத்து ஓடும் வெள்ளம். அது பாய்தலால் வழி சேறுபட்டுக் கழனிபோல் ஆயிற்று. அளறு - சேறு. கழனி - வயல். நடவை - வழி. கமலத்து அணங்கரசு.திருமகள். கையணை முகந்து - கையாகிய அணையைப் பற்றிக் கொண்டு.

    4. பணி - ஏவல். முடவுப் படப்பாய்ச் சுருட்டு - வளைவையுடைய படங்களையுடைய பாம்பாகிய பாயின் சுருள். பணைத்தோள் - திரட்சியையுடைய தோள். எருத்து அலைப்ப - பிடரியை வருத்த. பச்சைப் பசுங் கொண்டல் - மிகப்பசிய மேகம் போன்ற திருமால்.

    பைந்தமிழ்ப் பின் சென்ற கொண்டல்: திருவெஃகாவிற் கோயில் கொண்டெழுந்தருளிய பெருமாள், “கணிகண்ணன் போகின்றான்” என்ற திருமழிசை யாழ்வார் செய்யுளைக் கேட்டுத் தம்முடைய பாயலைச் சுருட்டிக் கொண்டு அவருடம் சென்றனரென்பதொரு வரலாறு; இதன் விரிவைத் திருமழிசையாழ்வார் சரித்திரத்தால் உணரலாகும்; “ஆடரவத், தாழ்பாய லாளரைநீ தானே தொடர்ந்தாயோ, சூழ்பாயோ டுன்னைத் தொடர்ந்தாரோ” (தமிழ்விடு. 92-3.)

    (முடிபு.) கலுழி அளறுசெய்ய, அணங்கரசு செல்ல, சுருட்டு அலைப்ப, மறைகள் முறையிட, சென்ற கொண்டல் அம்மனையைக் காக்க.