(சந்த விருத்தம்) 4. | சிகர வடவரை குனிய நிமிர்தரு | | செருவி லொருபொரு வில்லெனக் கோட்டினர் | | செடிகொள பறிதலை யமண ரெதிரெதிர் | | செலவொர் மதலைசொல் வையையிற் கூட்டனர் | | திருவு மிமையவர் தருவு மரவொலி | | செயவ லவர்கொள நல்குகைத் தீட்டனர் | | சிறிய வெனதுபுன் மொழியும் வடிதமிழ் | | தெரியு மவர்முது சொல்லெனச் சூட்டினர் |
| பகரு மிசைதிசை பரவ விருவர்கள் | | பயிலு மியறெரி வெள்வளைத் தோட்டினர் | | பசியவறுகொடு வெளிய நிலவிரி | | பவள வனமடர் பல்சடைக் காட்டினர் | | பதும முதல்வனு மெழுத வரியதொர் | | பனுவ லெழுதிய வைதிகப் பாட்டினர் | | பரசு மிரசத சபையி னடமிடு | | பரத பதயுக முள்ளம்வைத் தேத்துதும் |
4. (சந்தக்குழிப்பு.) தனன தனதன தனன தனன தனன தனதன தய்யனத் தாத்தன.
(அடி, 1) வடவரை - மேருமலை. குனிய - வளைய. செருவில் - திரிபுராதிகளோடு செய்ய எண்ணிய போரில். கோட்டினர் - வளைத்தவர். வடவரை குனியக் கோட்டினர். செடிகொள் - நாற்றத்தைக் கொண்ட. பறிதலை அமணர் - தாமே தம் மயிரைப் பறிக்கும் தலையையுடைய சைனர்; மயிர் பறித்தல் அவர்கட்கு ஓரு விரதம். அமணரெதிர் - அமணருக்கு முன்னே. எதிர்செல - நீருக்கு எதிரே செல்ல. மதலை - திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். சொல்: ‘வாழ்க வந்தணர்’ என்னும் பாசுரம், கூட்டினர் - கூடச்செய்தவர்.
திரு - திருமகள். தரு - கற்பகம். அர ஒலி - ஹரவென்னும் ஒலியை. ஹரவென்னும் திருநாமத்தைச் சொல்வோர் திருமால் பதவியையும் இந்திர பதவியையும் கொள்வரென்பது கருத்து. கைத்தீட்டு - கையெழுத்து; இங்கே உத்தரவுக்காயிற்று. முதுசொல் - தேவார முதலியன.
(2) இருவர்கள் - கம்பளாசுவதரர்கள். இயல் - இயல்பு. வெள்வளைத் தோடு - வெள்ளிய சங்கத்தோடு அறுகு - அறுகம்புல். நில - நிலா. பவளவனம் அடர் - பவளக்காட்டைப் போல் அடர்ந்த. பனுவல்: ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் செய்யுள். இறைவன் திருவாக்கில் வருவன
|