(2)
வெல்லாம் வேதம் ஆதலின் வைதிகப்பாட்டினரென்றார். இரசதசபை - வெள்ளி அம்பலம்; மதுரைத் தலத்துள்ளது. பதயுகம் - இரண்டு திருவடிகள்.
(3) தகரம் - மயிர்ச்சாந்து. எம் ஐயனை - சிவபெருமானை. சருவி - பின்னிட்டு, மறுகு - வருந்துகின்ற. எழுதரு - பிறரால் எழுதுதற்கரிய. மட்டு - தேன். தவளமலர் வரும் இளமின் - கலைமகள். சத தள மின் - திருமகள்; சத தளம் - நூறு இதழை யுடைய தாமரைப் பூ.
(4) மகரத்தை எறிகின்ற; மகரம் - மகரமீன். மழலை - எழுத்து வடிவம் பெற்றுத் தோற்றும் இளஞ்சொல்; “மெய்பெறா வெழுத்துயிர்க்கு மழலை” (சீவக. 181, ந.) பேட்டனம் - பெண் அன்னம். மடவ நடை - இள நடை. வரைசெய் - மலையை யொத்த; செய் உவம வுருபு. வழுதி - மலையத்துவச பாண்டியன். வரைசெய்புச முதலியன வழுதிக்கு அடை. தேக்கமழ் மதுரம் - தேனிற் பரவிய இனிமை. தமிழின் இயல் பயில் மதுரை; “தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை” (சிறுபாண். 66-7); “கூடலி னாய்ந்தவொண்டந்தமிழ்” (திருச்சிற்.)
(முடிபு) குழலும் நகையும் விழியும் தனமும் எழுதி எள்ளி இளமீனொடு சத தள மின் வழிபடு தையலை, அமுதை, கிள்ளையை, பிடியை, பெண்மணியை, செல்வியை, மதுரை மரகதவல்லியைக் காக்க, வைதிகப் பாட்டினருடைய பதயுகம் ஏத்துதும்.