(3)
(வேறு)
6. | பமர மடுப்பக் கடாமெடுத் தூற்றமொர் |
| பகடு நடத்திப் புலோமசைச் சூரப்புயல் |
| பருகி யிடக்கற் பகாடவிப் பாற்பொலி |
| பரவை யிடைப்பற் பமாதெனத் தோற்றிய |
5. (சந்தக்குழிப்பு.) தத்தன தானன தனனத் தனத்தன.
(அடி, 1) கைத்தலமும் இரண்டு கரடங்களுமாகிய கரையின் கண்; கரடம் - மதம்பாயும் சுவடு; இவை செவியடிகள். திரையைக் கக்கும். கடாம் - மதம். கடமாகிய உடைகடல். எமரென்றது அடியார்களை.
(2) தறி - யானை கட்டும் தம்பம்; “பத்தர் சித்தத் தறியணையும் ......ஒண்களிறே” (மூத்த. திருவிரட்டை, 18.) துவக்குறு-கட்டப்படுகின்ற. சித்தி விநாயகன் மதுரைத் தலவிநாயகர்.
(3) மதுரித்து - இனித்து. உவட்டெழு - பெருக்கெழுகின்ற.
(4) முத்தனம் - மூன்று நகில்கள். தேவி தடாதகைப்பிராட்டிாராக அவதரித்தகாலத்து மூன்று நகில்கள் இருந்தமையின் இங்ஙனம் கூறினர்.
(3-4) அமுதோ கொடியோவென உறை பெண்ணரசு.
(முடிபு.) பெண்ணரசைப் புரக்க, சித்தி விநாயகனது இசையைப் பழிச்சுதும்.
(6) (சந்தக்குழிப்பு.) தனன தனத்தத் தனாதனத் தாத்தன.
(அடி, 1) பமரம் = ப்ரமரம் - வண்டு (31, 196.) வண்டு யானையின் மதத்தை உண்ணும். பகடு - ஐராவதமென்னும் யானை. புலோமசையென்னும் தெய்வமகளாகிய மேகம்; சூர் - தெய்வப்பெண் (பி-ம்.) ‘புலோமிசை’. புயல்: எழுவாய். பருகியிட - இன்பம் நுகர. பரவை - கடல்; என்றது இந்திரனை; இந்திரன் கரிய நிறத்தினன். பற்பமாது - திருமகள். (பி-ம்.) ‘பத்மமாது’. இந்திரனிடத்தே தெய்வயானை தோற்றினளென்பது உபசாரம். நடத்திப் பருகியிடப் பொலி பரவையென்க.