கட்டளைக் கலித்துறை 318. | வாவியம் போருக்ஞ் சூழ்கம லேசர்புள் வாய்கிழித்த | | தூவியம் போருகந் தோறுநின் றோர்துணைத் தாளடைந்த | | ஆவியம் போருகந் தாயிரங் கூற்றுடம் றாலுமஞ்சேல் | | நாவியம் போருக நன்னெஞ்ச மேயவர் நாமங்களே. |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 319. | நாம வேற்படைக் கடவுளைப் பயந்தருள் | | நங்கைதென் கமலேசர் | | வாம பாகத்தைக் கொளவலப் பாகநீர் | | மங்கைகொண் டனள்போலாம் | | தாம நீற்றொளி தன்னிறங் காட்டவெண் | | டலைநிரை நுரைகாட்டக் | | காமர் பூங்கொடி மடந்தையர் மதர்விழிக் | | |
318. வாவியில் அம்போருகம் சூழ்ந்த; அம்போருகம் - தாமரை. புள்வாய் கிழித்த தூவி அம்போர் - பகாசுரனாகிய புள்ளின் வாயைக் கிழித்த திருமாலாகிய மென்சிறகையுடைய அம்பை உடையோர்; அம்பு விரைவாகச் செல்லுதற்பொருட்டு அதன் கோலில் சிறகு அமைக்கப்பட்டிருக்கும். உகந்தோறும் நின்றோர் - எல்லா யுகங்களிலும் அழிவில்லாமல் நிலைபெற்று நின்றவர். ஆவி ; விளி. அம்ப போர் உகந்து ஆயிரம் கூற்று உடன்றாலும்; கூற்று - யமன். அஞ்சேல் - பயப்படாதே. நா இயம்பு - நாவே கூறுவாயாக. நன்னெஞ்சமே ஓருக; ஓருக - தியானம் செய்க. அவர் நாமங்களை நாவே இயம்பு, நெஞ்சமே ஓருக என்க.
319. நாம வேற்படை - அச்சத்தைத் தரும் வேலியாத்ததையுடைய கடவுள் - முருகவேள். நங்கை - உமாதேவியார். நீர் மங்கை - கங்கை. தாம நீற்றொளி - விளக்கத்தையுடைய விபூதியின் ஒளி. தன்னிறம் - கங்கையின் நிறத்தை; அது வெண்ணிறமுடையது; “தம்மேனி வெண்பொடிநாற் றண்ணளியா லாரூர்ர், செம்மேனி கங்கைத் திருந்தியே” (345) என்பர் பின். வெண்டலை நிரை - தசையிழந்த தலைகளின் வரிசை; இதற்கு நுரை உவமை. கொடிபோன்ற மடந்தையர். விழியாகிய கயல். விழிக்கயல் உலாவரலாவது அம்மடந்தையர் எப்பொழுதும் சிவபிரானது திருமேனியே உற்று நோக்குதல்; “காமிக்கு மடந்தையர்கட் கயலெல்லா முமையடைதல் கணக்கே யன்றோ” (194) என்றார் முன்னும். நீறும் வெண்டலையும் மகளிர் பார்வையும் இறைவன் பாகமாகிய வலப்பாலுக்கு உரியனவாதலிம் அப்பாகத்தை மட்டும் கங்கை கொண்டாற் போன்றதென்றார்.
|