பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை229

நேரிசை யாசிரியப்பா
320.
வருமுலை சுமந்து வாங்கிய நுசுப்பிற்
புரிகுழன் மடந்தையர் பொன்னெடு மாடத்
தொண்கதிர் வயிரமுந் தண்கதிர் நீலமும்
சேயொளி பரப்புஞ் செம்மணிக் குழாமும்
5
மாயிரு துரந்து மழகதி ரெறிப்பச்
சுரந்தி முதல வரந்தி மூன்றும்
திருவநீண் மருகிற் செல்வது கடுப்ப
ஒள்ளொளி த்தும்பு மொண்டமிழ்க் கமலைத்
தெள்ளமு துறைக்குந் திங்களங் கண்ணித்
10
தீநிறக் கடவுணின் கான்முறை வணங்குதும்
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழி னுளையன்
ஊற்றமில் யாக்கை யுவர்நீர்க் கேணிப்

    320. யம்பந்ததினின்றும் உய்யக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகின்றார்.

    (1-8) திருவாரூரிலுள்ள மாடங்களிற் பதித்த வயிரம், நீலமணி, மாணிக்க மென்பவற்றாலுண்டான மூவகைச் சோதிகளும் ஒருங்கே வீதியிற் பரந்து திரிவேணி சங்கமுத்தை ஒத்தனவென்பர்.

    வருமுலை - தோன்றி வளரும் முலை. வாங்கிய நுசும்பின் - உள்வாங்கிய இடையையுடைய. மடந்தையர் வாழும் மாடம். சேயொளி - செந்நிற ஒளி. மாயிருள் - பேரிருளை. துரந்து - ஓட்டி. (பி-ம்.) ‘கதிரெறிப்பன’. சுரநதி - கங்கை; இது வெண்ணிறமுடையது. ஏனைய இரண்டு ந்திகள், நீல நிறமுடைய யமுனையும் செந்நிறமுடைய வாணியுமாம். கங்கை யமுனை வாணி மூன்றும் கூடி இடத்தைத் ‘திரிவேணி சங்கமம்‘ என்பர். திருவம் - செல்வம். கடுப்ப - ஒப்ப. ஒள்ளொளி - மிக்க ஒளி. கமலையில் உள்ள திரிவேணி சங்கம்ம் : 345.

    (9-10) உறைக்கும் - துளிக்கும். (பி-ம்.) ‘தெள்ளமுதிறைக்கும்’. திங்களாகியஅழகிய கண்ணியை யணிந்த; “மாதர்ப் பிறைக்கண்ணியானை” (தே.) தீயின் நிறத்தையுடைய கடவுள். காலை முறைப்படி வணங்கும்.

    (11-17) யமனை வலைஞனாக உருவகம் செய்வர்.

    கொடுந்தொழில் நுளையன் - உயிரை உடலினின்றும் பிரிக்குங் கொடிய செயலையுடைய வலைஞன்; “கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப”, (மணி.) ஊற்றம் - வன்மை. யாக்கையாகிய உவர்நீரையுடைய