| புலத்தலை யுயிர்மீ னலைத்தன்ன் பிடிப்ப | | ஐஎளி பித்தென வமைத்துவைத் திருந்த | 15 | முத்தலைத் தூண்டி றூண்டி யததலை | | வாழ்நாண் மிதப்பு நோக்கித் தாழா | | தயிறலைத் தொடங்கி யெயிறலைத் திருத்தலிற் | | றள்ளா முயற்சி தவறுபட் டொழிந்தென | | வெள்குறீஇ மற்றவன் விம்மித னாக | 20 | அருட்பெருங் கடலினவ வாருயிர் மீனம் | | கருக்குழி கழியப் பாய்ந்து தெரிப்பரும் | | பரமா னந்தத் திரையொடு முலாவி | | எய்தரும் பெருமித மெய்த | | ஐயநின் கடைக்க ணருளுதி யெனவே. |
கேணி; யாக்கை பிறருக்கு உதவாதாகலின் அதனை உவர் நீர்க்கேணியாக்கினர். பலமென்னும் தலையையுடைய உயிராகிய மீன்; புலம் - பொறி; அறிவுமாம். பிடிப்ப - பிடிக்கும் பொருட்டு. ஐ - சிலேட்டும்ம். வளி - வாயு. பித்து - பித்தம். இம்மூன்றும் உயிராகிய மீனைப் பிடிக்க உதவும் தூண்டிலிலுள்ள மூன்று முட்கள். உயிர் நீங்குதற்குக் காரணமாக வரும் நோயாக்கு இம்மூன்றன் நிலை மாற்றமே ஏதுவாதலின் இவற்றைத் தூண்டில் முள்ளென்றார் (530); “மிகினுங் குறையின் நோய்செய்யு நூலோர், வளிமுதலா வெண்ணிய மூன்று” (குறள், 941.) அத்தலை - அவ்விடத்தில். வாழ்நாளாகிய மிதப்பு; மிதப்பு - நீரின்மேல் மிதக்கும் நெட்டித் தக்கை. ‘தூண்டிற் காரனுக்கு மிதப்பிலே கண்’ என்பது பழமொழிநாதலின் ‘மிதப்பு நோக்கி’யென்றார். அயிறலைத் தொடங்கி - உண்ணுதற்குத் தொடக்கம் செய்து. எயிறு அலைத்து இருத்தலின் - பல்லைக் கடித்துகொண்டு ஆயத்தனாக இருத்தலினால்.
(18-24) ஒழிந்தென - ஒழிந்ததென. (பி-ம்.) ‘பட்டழிந்தென’ வெள்குறீஇ - வெட்கமுற்று. விம்மிதன் - ஆச்சரியமடைந்தவன்; ‘எல்லா மீன்களும் போல இஃது இல்லையே!’ என்று வியப்பு. அருட்பெருங்கடலின் - நின் அருளாகிய நன்னீரையுடைய பெரிய கடலில். கருக்குழி கழிய - கருப்பக்குழி ஒழிய; பிறவி நோய் நீங்கவென்றபடி. பரமானந்தமாகிய அலை. பெருமிதம் - வீரம். கடைக்கண் - கடைக்கட் பார்வை; ஆகுபெயர். பிறவிக் குழியினின்றும் நீங்கி நின் கருணைக்கடலிலுள்ள பேரின்ப அலையில் உலாவ அருள்வாயாக வென்றார்.
அருளுதியென வணங்குதும் (10) என்க.
|