பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை231

நேரிசை வெண்பா
321.
என்பணிந்த தென்கமலை யீசனார் பூங்கோயில்
முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்பென்னாம்
புண்சுமந்தோ ந்ந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
மண்சுமந்தா ரென்றுருகு வர்.

கட்டளைக் கலித்துறை
322.
வரந்தந் தருள வரதம்வைத் தாலென் வரதமிடக்
கரந்தந்த தாலிவர் கையதன் றேபலி காதலித்துச்
சிரந்தந்த செங்கைக் கமலேசர் நாமந் தியாகரென்ப
தரந்தந்த வாள்விழி யாடந்த தாங்கொ லறம்வளர்த்தே.
(15)

    321. தியாகப் பெருமான் வசங்கும் முனிவர்கள் தாம் ந்ந்தியின் பிரம்படி பட்டதற்கு வருந்தாமல் மதுரையில் எம்பிரான் மண் சூமந்து அடிபட்டதை நினைந்து வருந்தவர்; அவர் தலையன்பு இருந்தவாறு என்னேயென வியப்பார்.

    என்பை அணிந்த. பூங்கோயில் : திருவாரூர்த் திருக்கோயில் (324); தேங்காவி நாறுந் திருவாரூர்தி தொன்னகரிற், பூங்கோயிளுண்மகிழ்ந்து போகா திருந்தாரே” (தே திருநா.) ந்ந்தி புடைத்துப் புண் சுமந்தோம் என்று கருதாராய். தாம் பட்ட பிரம்படி அவர்களுக்கு இறைவன் பட்ட பிரம்படியையும் அதற்குக் காரணமாகிய மண்சுமந்த அருள்விளையாட்டையும் நினைந்து உருகச் செய்த்து. “வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்ட நின், பொன்பட்ட மேனியிற் புண்பட்ட போதிற் புவிநடையாம், துன்பட்ட வீரரந் தோவாத வூர்ர்தந் தூயநெஞ்சம், என்பட்ட தோவின்று கேட்டவென் னெஞ்ச மிடி பட்டதே” என்றார் ஒரு பெரியார் (பி-ம்.) ‘உருகுவார்’.

    322. சிவபெருமான் பிச்சை யேற்பவராதலின் அவருக்குத் தியாகரென்னும் திருநாமம் ஏற்புடையதன்று. அறம் வளர்த்த அம்பிகையின் தொடர்புபற்றியே அவருக்கு அத்திருநாம்ம் வந்தது. அங்ஙனமாயின் பெருமான் ஈகையைக் குறிக்கும் வரத்தை யுடையவரல்லரே யெனின், அதனையுடையதும் இடப்பாலிலுள்ள அம்பிகையின் கரமே யென்பர்.

    வரதம் வைத்தால் என் - வரதம் வைத்தால் இவருக்கு என்ன பெருமை? இவர் கை அது அன்றே. பலி - பிச்சை. இவரது கை பலிக்காக்க் கபாலத்தையுடைய கைதான். அரந்தந்த வாள் - அரத்தால் அராவிக் கூரைமையாக்கிய வாள். கொல்: அசைநிலை.

    “இறைவற்குத் தக்க விறுமாப் பெனுமொழி யின்றியொரு, மறுவற்ற தன்மனை யாட்கேற்ற தாமிறு மாப்பனெனக், குறை வற்ற நெற்கொண்டுலகேற் றுமைப்பலி கொள்ளமரன், பெறவுற்றமையனை யேகுன்றை வாழும் பெரியம்மயே” (பெரிய. கலித்துறை, 1) என்னும் செய்யுள் இங்கே நினைத்தற்குரியது.