அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 323. | வள்ளமுலைக் கலைமடந்தை மகிழ்நர்தலை மாலைசிர | | மாலை யாகக் | | கொள்ளுவது மலர்மடந்தை கொழுநர்தலை கிண்கணியாக் | | கோத்துச் சாத்த | | உள்ளுவது மொழிவதுமற் றொழியாயே லடிமுடிகள் | | உணர்ந்தே மென்றே | | கள்ளமொழி வான்புகிற்றென் கமலேச லவர்க்கவையே | | |
நேரிசை யாசிரியப்பா 324. | கருந்தாது கடுத்த பெரும்பணை தாங்கும் | | படர்மருப் பெருமைபைய் குவளை குதட்டி | | மடிமடை திறந்து வழிந்தபா லருவி | | கரைபொரு தலைப்பப் பெருகுபூந் தடத்து |
323. தியாகேசர் பிரமதேவருடைய சிரங்களைத் திருமுடியிற் திரமாலையாகவும் திருமாலினுடைய தலைகளைத் திருவடயிற் கிண்கிணியாகவும் அணிதலை நீக்கவேண்டுமென்பதற்கு ஒரு காரணம் கற்பிக்கின்றார்.
கலைமடந்தை மகிழ்நர் - பிரமதேவர். பிரமரும் திருமாலும் அழிந்தழிந்து அவதரிதலிற் பலரென்பது சைவர் கொள்கை. மலர்மடந்தை கொழுநர் - திருமால். கிண்கிணி - திருவடியில் அணிவது; திருவாரூர்த் தியாகேசர் கிண்கிணிக் காலழகராதலின் இதனையும் கூறினார்.
கொள்ளுவதும் உள்ளுவதும் ஒழிவது; ஒழிவது - ஒழிய வேண்டுவதே; வியங்கோட் பொருளில் வந்தது, “கொள்ளப்படாது மறப்ப தற்விலென் கூற்றுக்களே” (திருச்சிற். 87) என்பதிற்போல. முன்பு அடயையும் முடியையும் உணராது மயங்கிய திருமாலும் பிரமதேவரும் இப்பொழுது அடியிலும் முடியிலும் அணிகளாக மைந்த தம் தலைகளால் அவற்றை யுணர்ந்து, ‘யாம் முன்னரே அடிமுடிகள் யுணர்ந்தேம்; அவை இத்தகையன’ எனப் பொய் கூறப் புகின் அதை மறுக்க இயலாதென்றார். கள்ளம் மொழிவான் புகின் - பொய்ம்மொழி கூறப் புகுந்தால். அவை - திருமுடியிலுள்ள பிரமதேவர் தலைமாலையும் திருவடயிலுள்ள திருமுலின் தலைகளாகிய கிண்கிணியும். கரி - சாட்சி.
324. தம் வருத்தத்தை யுணர்ந்தும் தியாகேசர் அருள் செய்யாமைக்குக் காரணம் பிறவித்துயர் இத்தகையது என்று அப்பெருமான் அறியாமையே என்பர்.
(1-8) அன்னத்திற்குக் கலைமகள் உவமை (10, 706.)
கருந்தாது - இரும்பு (500.) பணை - பருமை. மருப்பு - கொம்பு. எருமையின் கொம்புக்கு இரும்ப் உவமை; “இரும்பியன் றன்ன கருங்கோட்
|