பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை233

5
வெண்டோ டவிழ்த்த முண்டகத் தவிசிற்
பானீர் பிரித்துண் தூவெள் ளெளினம்
நூற்பெருங் கடலு ணுண்பொரு தெரித்து
நாற்பயன் கொள்ளுநாமகட் பொருவும்
மென்பான் மருத்த் தண்புனற் கமலைத்
10
தென்பான் மேருவிற் றிகழ்பூங் கோயில்
மூவ ரகண்ட மூர்த்தியென் றேத்தும்
தேவ ரகண்ட தெய்வ நாயக
நின்னடித் தொழும்பி னிலைமையின் றேனுநின்
றன்னடித் தொழும்பர் சார்புபெற் றுய்தலிற்
15
சிறியவென் விழுமந் தீர்ப்பது கடனென
அறியா யல்லை யறிந்துவைத் திருந்தும்
தீரா வஞ்சத் தீப்பிறப் பலைப்பச்
சோரா நின்றவென் றுயமொழித் தருள்கிலை

டெரும்” ( அகநா. 56 : 3.) குதட்ட - மெல்ல. (பி-ம்.) ‘குதட்டி’. மடியாகிய மடை. (பி-ம்.) ‘மடுமடை’. தடம் - தடாகம். வெண்டோ டவிழ்த்த முண்டகத் தவிசில் - வெள்ளிய இதழை விரித்த வெண்டாமரையாகிய ஆசனத்தில். பாலை நீரினின்றும் பிரித்து உண்ணும் தூய வெண்மை நிறமுள்ள அன்னம்; பால் - எருமைப்பால். நாற்பயன் - அறம்பொருளின்பம் வீடு என்பன.

    (9-12) மென்பால் மருதம் - மென்பாலாகிய மருதம்; மருதமும் நெய்தலும் மென்பாலெனப்படும். தென்பால் உள்ள மேருவைப்போல விளங்கும் பூங்கோயில். (பி-ம்.) ‘திகழுங் கோயில்’. மூவர் ஏத்தும். அகண்ட மூர்த்தி - எங்கும் நிறைந்த திருமேனியை யுடையவர். தேவரகண்டர் : தியாகேசர் திருநாம்ம்.

    (13-8) நின் அடித்தொழும்பின் நிலைமை இன்றேனும் - நின் திருவடித் தொண்டு செய்வதில் நிலைபெறுதல் என்பால் இல்லையாயினும். நின் திருவடித் தொண்டில்லையெனும் நின் அடித்தொண்டர் சார்பைப் பெற்று உய்ந்தேன்; ஆதலின் என் துன்பத்தைத் தீர்ப்பது நின் கடன். திருத்தொண்டர்பால் தொண்டு பூணுதல் சிவபெருமானுக்கு அடிமை பூண்பதிலும் சிறந்ததாதலின் அத்தகையோருக்கு இறைவனு அருள் செய்தல் ஒருதலை யென்பது ஆன்றோர் கருத்து: இது பற்றியே ‘என் விழுமந் தீர்ப்பது கடன்’ என்றார். “படமாடக் கோயில் கபவற் கொன்றீயின், நடமாடக் கோயி னம்பர்க்கங் காகா, நமாடக்கோயி னம்பர்க்கங் கொள் றீயின், படமாடக் கோயிற் பகவற்கய் காமே” (திருமந்திரம்), “அன்பர்பணி செய்யவெனையாளாக்கி விட்டுவிட்டால், இன்ப நிலை தானேவந் தெய்தும் பராபரமே” (தாயுமானவர்) என்பவற்றை அறிக. அறிந்து வைத்திருந்தும் - முன்னரே அறிந்திருந்தும்; வைத்து : ஒரு சொன்னடை.