பக்கம் எண் :

234குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

புறக்கணித் திருந்ததை யன்றே குறித்திடிற்
20
கோள்வாய் முனிவர் சாபநீர்ப் பிறந்த
தீவாய் வல்வினைத் தீப்பயன் கொண்மார்
உடல்சுமந் துழலுமக் கடவுளர்க் கல்லதை
பிறவியின் றுயர்நினக் கறிவரி தாகலின்
அருளா தொழிந்தனை போலும்
25
கருணையிற் பொலிந்த கண்ணுத லோயே.    
(17)

நேரிசை வெண்பா
325.
கண்ணனார் பொய்ச்சூள் கடைபிடித்தோ தென்புலத்தார்
அண்ணலா ரஞ்சுவரென் றஞ்சியோ - விண்ணோர்
விருத்தாடு மாரூரா மென்மலர்த்தா டூக்கா
திருந்தாடு கின்றவா வென்.    
(18)

    (19-25) ஐ, அன்று, ஏ : அசை நிலைகள். கொள்வாய் முனிவர் - விரதமாகிய கொள்கை வாய்த்த முனிவரது. சாபமாகிய கடலிற் பிறந்த பாவத்தின் பயனைக் கொள்ளும் பொருட்டு. அக்கடவுளரென்றது பிரமன் முதலியோரை. முனிவர்கள் சாபத்தால் பிரமன் முதலியோர் பலவகைப் பிறவியெடுத்தனரென்பது புராண வரலாறு. அக்கடவுளரே பிறவியின் துன்பத்தை அறிவார்; நீ அதனை அறியாயென்றார். இவ்வாசிரியரே, “செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள்” என்று மற்றைத் தெய்வங்களைக் கூறுவர். ’இயல்பாகவே கருணையிற் பொலிந்த நீ எனக்கு அருளாதிருத்தற்குத் தக்க காரணம் ஒன்று இருத்தல் வேண்டும்; இதுவே அக்காரணம் போலும்’ என்றார்.

    325. தியாகேசர் இருந்து ஆடுதற்குச் சில காரணம் கற்பிக்கின்றார்.

    இருந்தாடழக ரென்பது தியாகேசர் திருஆம்ம்; “அளவில் பல்லுயிருங் களியுற விருந்தா தழகர்வீற் றிருந்தரு ளாரூர்” (தியாகராச. நகரப். 8) திருவடி தெரிய நின்றாடின் முன்னர்த் திருவடி காணாது அலமந்த திருமால் கண்டேனென்று கூறுவரென்பது கருதியோ, முன்னொருகால் யமன் திருவடியால் உதை பட்டவனாதலின் இப்போது தூக்கிய திருவடிகண்டு மீண்டும் உதைவிழுமென்று அஞ்சவனென்பது கருதியோ நீ இருந்தாடுகின்றாயென்பர்.

    கண்ணனார் திருமால், சூள் - உறுதிமொழி. கடைப்பிடித்தோ - உறுதியாக எண்ணியோ. தென்புலத்தார் அண்ணலார் - யமன். விண்ணோர் விருந்து ஆடும் - தேவர்கள் புதுமையை அனுபவிக்கும்; இது திருவாரூருக்கு அடை. ஆடுகின்றவா - ஆடுகின்றவாறு; ஈறு - குறைந்தது.