கட்டளைக் கலித்துறை 326. | என்னுயிர்க் கொக்கு மிளஞ்சேயொ | | டேழுல கீன்றவன்னை | | மன்னுயிர்க் கொக்குங் கமலைப் | | பிரான்மணி கண்டங்கண்டு | | மின்னுயிர்க் கும்புய லென்றுமென் | | கொன்றைபைந் தாதுயிர்க்கப் | | பொன்னுயிர்க் கொண்கன் பொலன்றுகி | | |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 327. | பூமாதி னிதயகம லத்து வைகும் | | பொலிவானு மரியணைமேற் புணரி யீன்ற | | மாமாது வழிபடவீற் றிருத்த லானும் | | மறைமுதலு நடுமுதலு முடிவி னின்ற |
226. இவ்வாசிரியருக்கு வழிபடு கடவுள் முருக்ககடவுளாதலின் அவரை, ‘என்னுயிர்க்கொக்கு மிளஞ்சேய்’ என்றார். அன்னையது உயிருக்கு ஒக்கும் கமலைப்பிரான். மணி கண்டம் - நீல நிறம்பொருந்திய திருக்கழுத்து. திருக்கழுத்தை மின்னை வெளிப்படுத்தும் மேகமென்றெண்ணிக் கொன்றை மலர்ந்து தாதை உதிர்த்து. உயிர்த்தல் - வெளிப்படுத்துதல். கொன்றை கார்காலத்தில் மலர்வதாதலின் மேகம்போன்ற கண்டத்தைக் கண்டு மலர்ந்தது; “கார்விரி கொன்று” (அகநா.) கொன் - திருமகள்; அவளுடைய உயிர்க்கொண்கன் திருமால். பொலன் துகில் - பீதாம்பரம்; பொலன் - பொன். கொன்றையின் தாது பொன்னிறத்தாதலின் என்றிரானது ஆடையில் அது பரந்து அவ்வாடையைப் பீதாம்பரம் போலத் தோற்றச் செய்தது. இது திரிபதிசய அணி.
327. தியாகேசப் பெருமானே மும்மூர்த்தியும் ஆவாரென்பதற்குரிய காரணங்கள் சமற்காரமாக்க் கூறப்படும்.
பூமாது - மண்மகள். அவள் இதய கமலம் திருவாரூர். ஒரு கமலத்தில் வைகுதலின் பிரமனை ஒத்தார். அரியணை - சிங்காதனம். புணரி - பாற்கடல். மா மாது - திருமகள். இத்தலத்தில் திருமகள் வழிபட்டுப் பேறுபெற்றாள். திருமகள வழிபட வீற்றிருத்தல் திருமாலுக்கும் தியாகேசருக்கும் பொதுத் தன்மை. மறைமுதல் - பிரமதேவர். நடுமுதல் - மும்மூர்த்திகளில் நடுவில்
|