| தாமாத றெளிவிப்பார் போலு நீலத் | | தரங்கநெடுங் கடன்ஞால மொருங்கு வாய்த்த | | கோமாது மனங்குழையக் குழைந்த வாரூர்க் | | குழகனார் கிண்கிணிக்கா லழக னாரே. |
நேரிசை யாசிரியப்பா 328. | அழவிலர் சோதி முழுவெயி லெறிப்ப | | இளநில வெறிக்குங் குளிர்மதிக் குழவியும் | | வெஞ்சினம் பொதிந்த நஞ்சுமிழ் பகுவாய் | | வெள்ளைமுள் ளெயிற்றுப் பிள்ளைவா ளரவும் | 5 | தெண்டிரை கொழிக்குந் தீம்புன்ற் கங்கைத் | | தண்டுற் மருங்கிற் றனுவிளை யாட | | உடன்வைத் தாற்றிய படர்சடைக் கடவுள் | | எறுழ்வலித் தறுகட் டெறுசினக் கேழல் | | முளையெயி றிலங்க முருகுகொப் புளித்துத் | 10 | தளையழி ழிதழித் தண்டார் மார்ப | | திருவிழி இரண்டிலு மிருசுடர் வழங்கலின் | | இரவுநன் பகலு மொருபுடை கிடந்தெனக் | | கடங்கலுழ் கரடத் தடங்களிற் றுரிவையும் |
வைத்து எண்ணப்படும் திருமால். ஒருங்கு வாய்த்த - ஒருங்கே கருப்பத்தில் வாய்த்த. கோ மாது - உமாதேவியார். குழகனார் - இளமையையுடையவர். கிண்கிணிக் கலழகனார்; தியாகேசர் திருநாமம்.
328. சிவபெருமானைத் தேவருள் ஒருவராக வைத்து எண்ணுதல் பிழை என்பர்.
(1-7) அழலவிர் சோதி - சிவபெருமானிம் திருமேனிச் சோதி; சடையின் சோதியுமாம். ஆற்றிய - சுமந்த. ஒன்றையுன்று பகைக்கும் இயல்பையுடைய சந்திரனையும் பாம்பையும் உடன்வைத்தாயென்றது ஒரு நயம். மதிக்குழவி, பிள்ளை வாளரவென்றதற்கேற்ப விளையாடவென்றார்.
(8-10) எறுழ்வலி - மிக்க வன்மை. கேழல் முளைஎயிறு இலங்க. பன்றியின் மூங்கில்முளைபோன்ற கொம்பு விளங்க. முருகு - நறுமணம். தறையவிழ் இதழி - முறுக்கவிழ்ந்து மலர்ந்த கொன்றை. பன்றிக்கொம்பு பிறைபோன்றிருத்தலின் அதுகண்டு கொன்றை மலர்ந்தது.
(11-15) இருசுடர் - சந்திர சூரியர். கிடந்தென - கிடந்தாற் போல. கடம் கலுழ் - மதம் பரவும். களிற்றுரிவை - யானைத் தோல். மடங்கல் ஈர் ஒரி - சிங்கத்தின் பச்சைத்தோல். அலமர - அசைய. “சிங்கத்துரி மூடுதிர்” (தே.) என்பதனால் சிங்கத்தோலையும் இறைவன் போர்த்ததறிக. யானைத
|