| மடங்கலீ ருரியு முடன்கிடந் தலமர | 15 | விண்பட நிவந்த திண்பு யாசல | | நெட்டிலைக் கமுகி னெடுங்கயி றார்த்துக் | | கட்டுபொன் னூசல் கன்னிய ராடவப் | | பைங்குலைக் கமுகு பழுக்காய் சிந்த | | வெண்கதிர் நித்திலம் வெடித்துகு தோற்றம் | 20 | கந்தரத் தழகு கவர்ந்தன விவையென | | அந்தி லாங்கவ ரார்த்தன ரலைப்ப | | ஒண்மிட றுடைந்தாங் குதிரஞ் சிந்தக் | | கண்முத் துகுத்துக் கலுழ்வது கடுக்கும் | | தண்டலை யுடுத்த வொண்டமிழ்க் கமலைப் | 25 | பொற்பதி புரக்கு மற்புதக் கூத்தநின் | | சேவடிக் கொன்றிது செப்புவன் கேண்மதி | | விலங்கினுண் மிக்கது விண்ணவர் தருவென | | ஒருங்குவைத் தெண்ணுவ தோர்வழக் கன்மையின் | | ஒத்த சாதியி னுயர்புமற் றிழிபும் | 30 | வைத்தன ரல்லதை வகுத்தனர் யாரே | | ஆருயிர்க் கமைத்த வோரெழு பிறப்பினுள் |
தோலுக்கு இருளும் சிங்கத்தோலுக்குப் பகலும் உவமைகள்; “ இரும்பிடி மே எந்தோலன்ன விருள்சேர்பு” (மதுரைக். 634.)
(16-24) சோலை வருணனை. மகளிர் பாக்குமரத்தில் கட்டிய ஊசலில் ஆடும்போது நிகழ்வன கூறப்படும்.
கமுகமரத்தில் நீண்ட கயிற்றைப் பிணித்து. பழுக்காய் - பாக்குக் காயை. கமுகமரத்தில் முத்து உண்டாகு மாதலின் ஊசலை அசைத்தலினால் அதிலிருந்து நித்திலம் உக்கதென்றார், சுந்தரத் தழகு - கழுத்தின் அழகை; மகளிர் கழுத்துக்குக் கமுகை உவமை கூறுதல் மரப்ழ. அந்திலை, ஆங்கு: அசைநிலைகள். அலைப்ப - வருத்த. பாக்குக்காய்க்கு இரத்தமும் முத்துக்குக் கண்ணீரும் ஒப்பு.
(25) பொற்பதி - பொலிவு பெற்ற நகரம்.
(27-30) ஒரே சாதிப் பொருள்களுள் உயர்உ தாழ்வு கூறுதல் மரபேயன்றி வெவ்வேறு சாதிப்பொருள்களை ஒருங்கு வைத்தெண்ணி உயர்வு தாழ்வு கூறுதல் மரபன்று. விண்ணவர் தரு - கற்பகம். அது விலங்கினத்தைச் சார்ந்தது அன்மையின், ‘விலங்கினுண் மிக்கது விண்ணவர் தரு’ என்றல் பிழையாயிற்று. அல்லதை - அல்லது பிறவாறாக; ஐ : சாரியை. (31-35) தேவசாதி எழுவகைப் பிறப்பினுள் முதன்மையானது.
|