பக்கம் எண் :

238குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

முற்படு தேவருண் முதல்வனென் றெடுத்துக்
கற்பனை கடந்த கடவுணிற் பழீச்சும்
தொன்மறைக் குலங்கள் முன்னிய தியாதெனப்
35
பன்மறை தெரிப்பினும் பயன்கொள வரிதால்
தேவரி னொருவனென் றியாவரு மருளுற
நீயே நின்னிலை நிகழாது மறைத்துக்
கூறிய தாகு மாகலிற்
றேறினர் மறையெனச் செப்பினர் நன்கே.        
(21)

நேரிசை வெண்பா
329.
    நல்லார் தொழுங்கமலை நாதனே நாதனெனக்
    கல்லாதார் சொல்லுங் கடாவிற்கு - வெல்லும்
    விடையே விடையாக மெய்யுணரா ரையுற்
    றிடையே மயங்குமிது வென்.    
(22)

கட்டளைக் கலித்துறை
330.
இதுவே பொருளென் றெவரெவர் கூறினு மேற்பதெது
அதுவே பொருளென் ற்றிந்துகொண்டேனப் பொருளெவர்க்கும்

    கற்பனை கடந்த கடவுள்: 332, 539. பழிச்சும் மறைக்குலங்கள் - புகழும் வேத்த் தொகுதிகள். (பி-ம்.) ‘பழிச்சுதும்’. இறைவனைத் தேவர்களுள் மேலானவனென்று வேதம் கூறுதலின் பொருள் அறிவரிது. எழுவகைப்பிறப்பினுள்ஒன்றாகிய தெய்வப் பிறப்பைக் கடந்த நின்னை அத்தெய்வப் பிறப்பில் வைத்தெண்ணுதல் தக்கதன்று.

    (36-39) நிகழாது - வெளிப்பட உணர்த்தாமல். தேறினர் - அறிவிற்றெளிந்தோர். மறை - உண்மையை மறைத்துக் கூறுவது.

    இறைவனைத் தேவருள் ஒருவனாக்க் கருதல் ஏற்புடையதன் றென்பதும் அவன் அவருக்கும் அரிய நிலையின்னென்பதும் கருத்து.

    329. கமலைநாதனே நாதன் - திருவாரூர்த் தியாகப் பெருமானா முதல்வன்? நாதனே; ஏ, வினா. கடா - வினா. திருமால் முதலியோருக்கு முதன்மை கற்பித்துச் சிவபிரானது முதன்மையில் ஐயுற்று வினாவுவாரைக் கல்லாதா ரென்றார். வெல்லும் - வெற்றிபெறும். விடையே விடை ஆக - சிவபெருமானைத் தாங்கும் திருமாலாகிய இடபமே விடையாக நிற்பவும். சிவபெருமானுக்கு வாகனமாகித் தாங்கும் செயலால், திருமால் அப்பெருமானுக்கு அடங்கியவரென்பதும் அதனாற் சிவபெருமானே முதலைவனென்பதும் போதருதலை நினைந்து, ‘விடையே விடையாக’ வென்றார். விடை - இடபம், உத்தரம்.

    330. இதுவே பொருள் - இம்மூர்த்தியே பரம்பொருள். எவரெவர் - பல்வேறு சமயத்தார். ஏற்பது - அவற்றை ஏற்றுக் கொள்ளும் பொருள்;