| பொதுவே யென்றாலும் பொருந்து மெல்லோர்க்கும் பொதுவினிற்கும் | | மதுவே மலர்ப்பொழி லாரூரி னும்வைகும் வைகலுமே. |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 331. | வைய முழுது முழுதுண்ண | | வல்லாற் களித்து நவநிதியும் | | கையி லொருவற் களித்தெமக்கே | | கதிவீ டளித்தோர் கன்னிகைக்கு | | மெய்யி லொருகூ றளித்தனரால் | | விமலர் கமலைத் தியாகரென்ப | | தைய ரிவர்க்கே தகுமுகமன் | | |
நேரிசை யாசிரியப்பா 332. | ஆமையோ டணிந்து தலையோ டேந்திக் | | காமரு மடந்தையர் கடைதொறுங் கடைதொறும் |
“விரிவிலா வறுவி னோர்கள் வேறொரு சமயஞ்செய்தே, எரிவினாற்சொன்னாரெனு மெம்பிராற் கேற்றதாகும்” (தே. திருநா.) “அறுவகைச் சமயத்தோர்க்கு மவ்வவர். பொருளாய் வேறாம், குறியது வுடைத்தாய் ... செறி வொழியாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்”, “யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வ மாகி யாங்கே, மாதொரு பாக னார்தாம் வருகுவர்” (சிவஞான சித்தியார்) என்றவை இங்கே நினைத்தற்குரியன. பொதுவே - பொதுப் பொருளே. பொதுவில் நிற்கும் - சபையில் நிற்கும்; பொதுவான இடத்தில் நிற்குமென்பது வேறு பொருள். ஆரூரினும் வைகும் - திருவாரூரிலும் எழுந்தருளியிருக்கும்; யாருடைய ஊரிலும் தங்குமென்பது வேறொரு பொருள்; “ஆரூரி லேயிருப் பீரினிப் போய்விடு ம்ம்பலத்தே” (தனிப்.)
331. உழுதுண்ணவல்லான் - திருமால்.வராகாவதாரத்தில் உழுது கிருஷ்ணாவதாரத்தில் திருவயற்றில் அடக்குதலின் இங்ஙனம் கூறினார். ஒழவுத்தொழில் செய்து அதனாற் பெறும் விளைவு கொண்டு உண்பானென்பது வேறொரு பொருள்; அத்தகையோனுக்கே நிலம் பயன்படுமாதலின் வையமுழுதும் அளித்ததாக்க் கூறினார். திருமாலுக்கு வையத்தை அளித்தலாவது அவர் மண்மகளை மனைவியாகப் பெறச்செய்த்து. ஒருவற்கு - குபேரனுக்கு. நவநிதி - ஒன்பது வகையான நிதிகள். நிதி எடுத்து அளிக்கப்படும் பொருளாதலின் ‘கையில் அளித்து’ என்றார். கதி வீடு - நற்கதியாகிய மோட்சத்தை; கதித்த வீடென்பது ஒரு பொருள். ஓர் கன்னிகை - உமாதேவியார். நிலம், நிதி, வீடு, உடம்பில் ஒருகூறு இவற்றைப் பிறருக்கு அளித்தமையின் இவரையே தியாகரென்று கூறுதல் தகும். முகமன் - உபசார வழக்கு. முகமனும் புகழுமன்றென்றது அவருக்கு இயல்பேயா மென்றதாம்.
332. இறைவன் இத்திறத்ததென்று அளவிடற்கரிய னென்பர்.
|