| பலிதேர்ந் துண்ணினு முண்ணு மொலிகழற் | | பைந்துழாய் முகிலும் பழமறை விரிஞ்சனும் | 5 | இந்திரா தியரு மிறைஞ்சினர் நிற்ப | | மற்றவர் பதங்கள் மாற்றியும் வழங்கியும் | | பற்றலர்ச் செகுத்து முற்றவர்த் தாங்கியும் | | பரசுநர் பரசப் பணிகுநர் பணிய | | அரசுவீற் றிருப்பினு மிருக்கு முரைசெயும் | 10 | யோக சாதனம் போகிகட் கின்மையிற் | | செஞ்சடை விரித்து வெண்பொடி பூசி | | எருக்கங் கண்ணியுஞ் சூடி விருப்புடை | | இடப்பான் மடந்தை நொடிப்போழ்து தணப்பினும் | | மடலூர் குறிப்புத் தோன்ற விடலரும் | 15 | காம்மீ தீர வேமுற் றிரந்தவள் | | தாமரைச் சீறடி தைவந் தம்ம | | புலவியிற் புலந்துங் கலவியிற் களித்தும் | | போகமார்ந் திருப்பினு மிருக்கும் யோகிகட் | | கெய்தா வொண்பொருள் கைவந்து கிடைப்ப | 20 | ஞான முத்திரை சாத்தி மோனமோ | | டியோகுசெய் திருப்பினு மிருக்கு மீகெழு |
(1-9) தலையோடு - பிரமகபலம். கடை - வாயில்.
(4-9) பைந்துழாய் முகில் - திருமால். விரிஞ்சன் - பிரமதேவர். பதங்கள் - பதவிகள். பற்றலர்ச் செகுத்தும் - பகைவரை அழித்தும். உற்றவர்த் தாங்கியும் - தன்பால் வந்தடைந்தோரைப் பாதுகாத்தும். தியாகேசப் பெருமான் திருவாரூரில் அரசராக வீற்றிருந்து ஆட்சி புரிந்தன்னாதலின் அரசுவீற்றிருக்குமென்றார்.
(10-14) யோகசாதனம் - யோகம் செய்வாருக்குரிய வேடம் முதலியன. போகிகள் - மகளிர் போகத்தை யுடையோர். இறைவன் சடைவிரித்துத் திருநீறுபூசி எருக்கங்கண்ணியைச் சூடியிருத்தலிக்கு ஒரு காரணம் கறிபிக்கின்றார். அவை யோக சாதனமெனின், போகியாகிய இரைவனுக்கு யோகசாதனம் வேண்டுவனவன்றாதலின், அவை மடலூருங் குறிப்பைக்காட்டுவனவென்றார். மடலூர்வோர் சடைவிரித்தல் முதலியவற்றைச் செய்தல் மரபு. இடப்பால் மடந்தை - உமாதேவியார். தணப்பினும் - பிரிந்தாலும்.
(15-18) ஏம் உற்று - மயக்கத்தை அடைந்து. தைவந்து - வருடி. புலவி - ஊடல். அம்ம : வியப்புக்குறிப்பு. போகமார்ந்து - இன்பத்தை நுகர்ந்து.
(19-20) ஞானமுத்திரை - சின்முத்திரை. யோகு - யோகம். ஆசாரிய மூர்த்தியாகியதைக் குறித்தபடி.
|