| தமனிய மாடத் தரமிய முற்றத் | | தைங்கணைக் கிழவ னரசிய னடாத்தக் | | கொங்கைமால் களிறுங் கொலைக்கண்வாட் படையும் | 25 | சில்கா ழல்குல் வெல்கொடித் தேரும் | | பல்வகை யுறுப்பும் படையுறுப் பாகப் | | பவக்குறும் பெறியுந் தவக்குறும் பெறிந்து | | நுணங்கிய நுசுப்பி னணங்கனார் குழுமிக் | | கைவகுத் திருந்து கழங்கெறிந் தாட | 30 | மையுண் கண்கண் மறிந்தெழுந் தலமரல் | | செம்முகத் தாமரைச் சிறையளிக் குலங்கள் | | அம்மென் காந்தளி னளிக்குல மார்த்தெழக் | | கலந்துடன் றழீஇக் காமுற னிகர்க்கும் | | பொலன்செய் வீதிப் பொன்மதிற் கமலை | 35 | அண்ணன் மாநகர்க் கண்ணுதற் கடவுள் | | கற்பனை கழன்று நிற்றலின் | | நிற்பதிந் நிலையெனு நியம்மோ வின்றே. |
நேரிசை வெண்பா 333. | இன்னீ ருலகத்துக் கின்னுயிர்யா மென்றுணர்த்தும் | | நன்னீர் வயற்கமலை நாதனார் - பொன்னார்ந்த | | சேவடிக்கா ளானார் சிலரன்றே தென்புலத்தார் | | கோவடிக்கா ளாகார் குலைந்து. |
(22-3) தமனிய மாடம் - பொன் மாளிகை. அரமிய முற்றம் நிலா முற்றம். ஐங்கணைக்கிழவன் - காமன். நடாத்த - நடத்தும்படி.
(24-8) கொங்கை முதலியவற்றைக் களிறு முதலிய படைகளாக உருவகம் செய்கின்றார். சில்காழ் - சில வடங்கள். உறுப்பு - அங்கம். படையுறுப்பு - சேனையின் உறுப்புக்கள். பவக்குறும்பு - பிறவியாகிய பகை. தவக்குறும்பு - தவஞ்செய்வோராகிய பகைஞர்.
(29-33) கைவகுத்து - பக்கம் பக்கமாகப் பிரித்துக்கொண்டு; படை வகுத்தென்பது வேறு பொருள். கழங்கு - ஒருவகை விளையாட்டுக் கருவி; கழற்சிக்காய். அலமரல் - சுழலுதல். அளிக்குலம் - வண்டினம். முகத்திலுள்ள கண்கள் கையிலிருந்தெழும் நீலமணிகளாகிய கழங்குகளைப் பார்த்து அவற்றோடே உலவுதல், இரு தாமரையிலுள்ள வண்டுகள் காந்தட் பூவிலிருந்து எழும் வண்டுகளோடு கலந்து பயிலுதலைப் போன்றது. முகத்துக்குத் தாமரையும், கைக்குக் காந்தளும், கண்ணுக்கும் கழங்குக்கும் வண்டுகளும் உவமைகள்.
(34-7) கற்பனை சுழன்று நிற்றல் : 328, 539. நியம்ம் - வரையறை.
333. இனிய நீர் சூழ்ந்த உலகம்; பயனால் இன்னீராயிற்று. சேவடிக்கு ஆளானார் - திருவடிக்கு ஆட்பட்டோர். தென்புலத்தார் கோ அடிக்கு - யம
|