கட்டளைக் கலித்துறை 334. | குலைவைத்த செவ்விள நீர்குளிர் பூம்பொழிற் கொம்புக்கின்ப | | முலைவைத்த தொக்குங் கமலேசர் வேணி முகிழ்நகைவெண் | | டலைவைத்த வேனற் புனமொக்குங் கங்கையத் தண்புனத்தில் | | நிலைவைத்த மாதரை யொக்குங் கவணொக்கு நீள்பிறையே. |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 335. | பிறையொழுக வொழுகுபுனற் கங்கை யாற்றின் | | பேரணையிற் றொடுத்துவிட்ட பெரும்பாம் பென்னக் | | கறையொழுகும் படவரவம் படரும் வேணிக் | | கண்ணுதலார் கமலையிற்பைங் கமலை போல்வீர் | | நறையொழுகு மலர்ப்பொழில்குத் தகையாத் தந்தீர் | | நானிரண்டு மாவடுவு நாடிக் காணேன் | | நிறையொழுகு மிளநீரு நிற்க்க் காணேன் | | நீர்செய்த காரியமென் னிகழ்த்துவேனே. |
தண்டனைக்கு (658, 687), தியாகேசருடைய அடியார்க்கு யம தண்ட மில்லையென்றபடி.
334. பொழிலாகிய மங்கைக்கு இளநீர், நகில்வைத்தாற் போன்றது (428). கொம்பு - பெண். வேணி - சடை. சடையானது ஏன்ற்புனத்தையும், கங்கை அப்புனத்தைக் காக்கும் குறமகளையும், பிறை கவணையும் ஒக்கும். ஏனற்புனம் - தினைக்கொல்லை. வெண்டலை - சிவபிரான் சடையிற் சூடிய சிரமாலை; ஏன்ற்புனத்தில் சுண்ணம் பூசித் தலைபோற் செய்து வைத்ததோர் உருவம்.
335. இது புறங்காட்டலென்னும் துறை. தலைவன் கூற்று.
கறை - விடம். சடையிலுள்ள பாம்பு கங்கையாற்றுக்கு அணை போடும் பொருட்டு அமைத்த பாம்பைப்போன்றது. வைக்கோற் புரியை அணையிலிடுவர். அதனைப் பாம்பென்பர்; “கிட்டு வார்பரி நிறுத்து வார்ர வுருட்டுவார்” (திருவிளை. 61 : 5.) கமலை - திருவாரூர், திருமகள். மலர்ப்பொழிலென்றது கூந்தலை. குத்தகை வழக்கு. இரண்டு மாவடுவென்றது கண்களை. இளநீர் : நகில். புறங்காட்டியமையின் கண்ணையும் தனத்தையும் காணாமல் கூந்தலை மட்டும் கண்டான். சோலையைக் குத்தகைக்குவிட்டு அதிலுள்ள மாவடுவையும் இளநீரையும் யான் பெறாமற் செய்தல் தக்க தன்றென்று ஒரு பொருள் தோற்றியது.
|