| மாந்தர் யாவருங் காந்தியிற் பொலியும் | | வரமிகு கமலைத் திருநகர்ப் பொலிந்தோய் | | எழுதாக் கிளவிநின் மொழியெனப் படுதலின் | | நின்பெருந் தன்மை நீயே நவிற்றுதல் | 20 | மன்பெரும் புலமைத் தன்றே யும்பரின் | | நின்னோ ரன்னோ ரின்மையி னின்னிலை | | கூறாய் நீயெனிற் றேறுந ரிலரால் | | தன்னுடை யாற்றன் முன்னார் முன்னர்த் | | தற்புகழ் கிளவியுந் தகுமென் றம்ம | 25 | நிற்புகழ்ந் திசைத்தனை நீயே யாக | | இருடீர் காட்சிப் பொருடுணிந் துணர்த்தா | | தியங்கா மரபி னிதுவிது பொருளென | | மயங்கக் கூறுதல் மாண்புடைத் தன்றே | | அளவில் காட்சியை யையமின் றுணர்த்தலிற் | 30 | றளரா நிலைமைத் தென்ப வென்றலிற் |
நினைந்து. அவர்கள் மழுவைக் குயிலுடையராகத் தோன்றுவர். ஓர் உண்மையை நிலைநிறுத்தற் பொருட்டு மழுவேந்துத்தல் உலக வழக்கம்; ஆதலின் அவர்கள் மழுவேந்தி யிருத்தல், “இத்தலத்திற் பிறந்தார் இனி பிறவியையே அடையார்” என்னும் உண்மையை நிலைநிறுத்துவதாகத் தோற்று மென்றார். தலத்து உறார் - பூமியிற் பிறவார். காந்தி - பேரொளி.
(18-20) எழுதாக் கிளவி - வேதம். அது சிவபெருமான் திருவாக் கென்பதை முன்னும் (328) கூறினார். தன் புகழைத் தானே கூறுதல் தக்கதன்றென்பது கருதி, ‘மன்பெரும் புலமைத்தன்றே’ என்றார். புலமைத்து - அறிவுடைய செயல்.
(21-5) (பி-ம்.) ‘நின்னோ ரன்னர்’. தேறுநர் - தெளிபவர். முன்னார் - உணரார். தற்புகழ் கிளவி - தன்னைப் புகழ்ந்துரைக்கும் கூற்று. “தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும், தன்னைப் புகழ்தலுந் தகும்” (பனம்பாரம்) என்பதை நினைந்து இங்ஙனம் கூறினர்.
(26-8) இருள்தீர் காட்சிப்பொருள் துணிந்து உணர்த்தாது - மயக்கம் தீர்ந்த ஞானத்தால் அறியப்படும் உண்மைப்பொருளைத் தெளிவாக உணர்த்தாமல். வேதத்திற் கூறப்படும் உண்மை மயக்கத்தைத் தருவதென்னும் சிலர் கொள்கையை மேற்கொண்டு கூறியபடி.
|