பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை245

றன்னுடை மயக்கந் திசைமேல் வைத்துச்
சென்னெறி பிழைத்தோன் திசைமயங்கிற்றென
மொழிகுவ தேய்ப்ப முதுக்குறை வின்மையிற்
பழமறை மயங்கிற் றென்னா முழுவதும்
35
எய்யா திசைக்குதும் போலும்
ஐயநின் றன்மை யளப்பரி தெமக்கே.    
(29)

நேரிசை வெண்பா
337.
அள்ளற் கருஞ்சேற் றகன்பணைசூ ழாரூரர்  
வெள்ளப் புனற்சடைமேல் வெண்டிங்கள் - புள்ளுருவாய்  
நண்ணிலா தாரை நகைக்கு நகையைநன்றோ  
தண்ணிலா வென்னுஞ் சகம்.     
(30)

    (31-36) வேதம் மய்ங்கக் கூறுவதென்று கூறுவார் கூற்றைக் காரணங் கூறி வலியுறுத்துகின்றார்.

    முதுக்குறைவு - முதிர்ந்த அறிவு. பழமறை மயங்கிற்று என்று - பழைய வேதம் மயங்கியதென்று. முழுவதும் எய்யாது - முற்றும் உணராமல். என்னா இசைக்குதும்; என்னா - என்று எங்களுணைய மயக்கத்தை வேத்ததின்மேல் ஏற்றிக் கூறுகின்றோம்; முற்றும் உணர்ந்தால் இங்ஙனம் கூறமாட்டோம். இச்செய்யுளின் பிற்பகுதியின் கருத்து விளங்குதற் பொருட்டுப் பின்வருமாறு வினாவிடைகளாக்குதல் பொருந்தும்.

    வினா:- இறைவன் வாய்மொழியே வேதமென்பர்; அதன் கண் அவனது தன்மை கூறப்படும்; தன்னைத்தான் புகழ்தல் அறிவுடையோர் செயலாகுமோ?

    விடை:- அவனது பெருமை பிறரால் அறிவரிதாதலின் அதனை அவனே கூறல்வேண்டும்; தன்னுடை யாற்றலுணராரிடையே தற்புகழ்தலும் தகுமாதலின் இரு பொருந்தும்.

    வினா:- வேதம் இறைவன் உரைத்தது எனின், அதன்கண் பரம்பொருளின் நிலையா மயங்க் உரைத்தது என்?

    விடை:- அது மயங்கக் கூறவில்லை; ஐயமில்லாமலே உணர்த்தியது.

    வினா:- வேதம் மயங்கிற்றென்று பிறரும் கூறுகின்றனரே?

    விடை:- திசை மயக்கத்தை யடைந்த ஒருவன் தனது மயக்கத்தைத் திசையின்மேல் வைத்துத் திசைமயங்கிற்றென்று கூறுதலைப்போலத் தம் மயக்கத்தை வேதத்தின்மேல் ஏற்றிக்கூறியதே ஆகும் அது.

    வினா:- பின், அவர் மயங்கற்குக் காரணம் என்ன?

    விடை:- அவர்கள் முற்றும் உணர்ந்து உண்மையை அறியவில்லை.

    337. அள்ளற் கருஞ்சேறு - குழைவையுடைய கரிய சேறு. அகன்பணை - அகன்ற வயல்கள். புள் - அன்னம். புள்ளுருவாய் (திருமுடியை)