பக்கம் எண் :

246குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கட்டளைக் கலித்துறை
338.
தண்மல ரும்பொழிற் றென்கம லேசர்க்குச் சாத்துகின்ற
ஒண்மலர் சொன்மலர்க் கொவ்வாது போலுமற்றோர் புலவன்
பண்மலர் சாத்திப் பணிகொண்ட வாபச்சை மால்சிவந்த
கண்மலர் சாத்தியுங் காண்பரி தான கழன்மலரே.    
(31)

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
339.
மல்லல்வளங் கனிந்தபுகழ்க் கமலேசர் திருவுருவும்
   வாம பாகத்
தல்லமர்பைங் குழலுமையா டிருவுருவு மிருவருக்கும்
   அமுத மான

நண்ணிலாதாரை - பிரமதேவரை. நகைத்தலாவது, ‘யான் கண்ட திருமுடியை நீ காணும் ஆற்றல் பெற்றிலையே!’ எனக் கூறிச் சிரித்தல். இது தற்குறிப்பேற்ற வணி.

    338. தண் - தண்மை. ஒண்மலர் - ஒள்ளிய மலர். சொன்மலர் - தோத்திரமாகிய மலர். மற்று : அசைநிலை. ஓர் புலவன் - சுந்தரமூர்த்தி நாயனார். பண்மலர் சாத்தி - பண்ணிறைந்த திருப்பதிகங்களாகிய மலர்களை அணிந்து; “மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய வாரூரை, நன்னெடுங் காதன்மையா னாவலர் கோனூரன், பன்னெடுஞ் சொன்மலர் கொண் டிட்டன பத்தும் வல்லார். பொன்னுடை விண்ணுலக நண்ணுவர் புண்ணியரே” என்று சுந்தரமூர்த்தி நாயனாரே கூறுதல் காண்க. “அற்சனை பாட்டே யாகு மாதலான் மண்மே னம்மைச், சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்” (பெரிய.தடுத்தாட். 70) என்னும் இறைவன் கட்டளைப்படி அவர் சொன் மலர் சாத்தினர். பணிகொண்டவா - ஏவல்கொண்டது என்ன வியப்பு!. மால் கண்மலர் சாத்தியும் காண்டற்கு அரிதாகிய திருவடியை (547); “மண்வைத்த குக்கி வளை வைத்த செங்கைமால், கண்வைத்துங் காணாக் கழலினான்” (திருவிடை. உலா.) கண்மலர் - கண்ணாகிய மலர், கள்ளையுடைய மலர்; சிலேடை. கழன்மலரைப் பணி கொண்டவாவென்க. இது பரவையினிடம தூது போகச் செய்த்தைக் குறித்தவாறு. தூதுசென்றவை திருவடிகளே யாதலின் அவற்றைப் பணிகொண்டதாகக் கூறினர். இங்ஙனம் செய்தலின் சொன்மலரே சிறந்ததென்று காரணங் காட்டி நிறுவினார்.

    339. மல்லல் வளம் - மிக்க வளம். அல் அமர் - இருளைப் போன்ற. அயில்வேல் - கூர்மையையுடைய வேல். குழவி - முருகக் கடவுள். அரு உருவாம் குணங்கள் மூன்றின் நல் உரு ஆதலின் - அருவத்தையே உருவாகப் பெற்ற குணங்கள் மூன்றின் நல்ல உருவம் ஆதலினால். (பி-ம்.) ‘குணங்கண்