பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை247

கொல்லயில்வேற் பசுங்குழவி திருவுருவு
   மருவுருவாம்கணங்கண் மூன்றின்
நல்லுருவா தலினன்றோ விவரகில காரணராய்
   நவில்கின் றாரே.    
(32)

நேரிசை யாசிரியப்பா
340.
    நவமணி குயின்ற நாஞ்சில்சூழ் கிடக்கும்
    உவளகங் கண்ணுற் றுவாக்கட லிஃதெனப்
    பருகுவா னமைந்த கருவிமா மழையும்
    செங்கண்மால் களிறுஞ் சென்றன படிய
5
    வெங்கணவா ளுழவர் வேற்றுமை தெரியார்
    வல்விலங் கிடுதலின் வலிவிலங் கிதுவெனச்
    செல்விலங் கிடவெதிர் சென்றனர் பற்றக்
    காக பந்தரிற் கைந்நிமிர்த் தெழுந்து
    பாகொடு முலாவிப் படர்தரு தோற்றம்
10
    நெடுவேல் வழுதி நிகளம் பூட்டிக்
    கொடுபோ தந்த கொண்டலை நிகர்க்கும்
    சீர்கெழு கமலைத் திருநகர் புரக்கும்

மூன்று’. சிவபெருமானது வெண்ணிறம் சத்துவ குணத்திற்கும், உமா தேவியாரது நீலநிறம் தாமத குணத்திற்கும், முருகக் கடவுளது செந்நிறம் ரஜோ குணத்திற்கும் உரியனவாதலின் இங்ஙனம் கூறினர். நவில்கின்றார் - பயிலுகின்றார். முக்குணமுடைய மூர்த்திகளால் உலகத்தின் படைப்பு முதலியன நடைபெறுதலின் அம்முக்குணத்திற்கும் உருவம்போன்ற இவர்கள் அவற்றை நடத்துவார் போன்றனர். தியாகேசர் சோமாஸ்கந்த மூர்த்தியாதலின் அம்பிகையையும் முருகக் கடவுளையும் உடன் கூறினார்.

    340. (1-11) அகழியின்கண் மேகத்திற்கும் யானைக்கும் வேறுபாடு தெரியாமல், யானைப்பாகர் செய்யும் செயல் கூறப்படும்.

    நாஞ்சில் - மதில். உவளகம் - அகழ். உவாக்கடல் - நீர் நிறைந்த கடல். கருவி மா மழை - மின் முதலிய தொகுதிகளையுடைய கரிய மேகம். வாள் உழவர் - வீர்ர். யானைக்கும் மேகத்திற்கும் வேற்றுமை தெரியாமல் இரண்டுக்கும் விலங்கிட்டனர் (206). வல்விலங்கு இது என செல் விலங்கிட - வலிய மிருகமாகிய யானை இது என்று அறிந்து மேகமானது நீங்க். காகபந்தர் - காகங்கள் ஒருங்கே படர்ந்து பறந்துவரும் பரப்பு. படர்தரு தோற்றம் - வானத்தில் மேகம் செல்லும் காட்சி. வழுதி - உக்கிரகுமார பாண்டியன். நிகளம் - விலங்கு. கொடுபோதந்த - கொண்டு வந்த.

    (12) புரக்குமென்றார் தியாகேசர் அரசராயிருந்தமைபற்றி.