| கார்திரண் டன்ன கறைமிடற் றண்ணல் | | மூவரென் றெண்ணநின் முதற்றொழில் பூண்டும் | 15 | ஏவலிற் செய்துமென் றெண்ணா ராகி | | அடங்கா வகந்தைக் கறிவெலாம் வழங்கி | | உடம்பு வேறா யுயிர்ப்பொறை சுமந்து | | நாளு நாளு நேடினர் திரிந்தும் | | காணா தொழிந்ததை நிற்க நாணா | 20 | தியாவரு மிறைஞ்ச விறுமாப் பெய்துபு | | தேவரென் றிருக்குஞ் சிலர்பிறர் தவத்தினும் | | மிகப்பெருந் தொண்டரொ டிகலிமற் றுன்னொடும் | | பகைத்திறம் பூண்ட பதகனே யெனினும் | | நின்றிருப் பாத நேர்வரக் கண்டு | 25 | பொன்றின னே்னும் புகழ்பெற் றிருத்தலின் | | இமையா முக்கணெந் தாய்க்கு | | நமனார் செய்த நற்றவம் பெரிதே. |
(14-19) மூவரென்றெண்ண - நின்னொடு சேர்த்து மும்மூர்த்திகளென்று எண்ணும்படி. நின் முதற்றோழிலென்றது, இறைவன்றொழிலாகிய சங்காரத்திற்கு முற்பட்ட சிருட்டியையும் திதியையும். அகந்தைக்கு அறிவெலாம் வழங்கி - அறிவின்றி அகங்காரத்தை யடைந்து. உடம்பு வேறாய் - அதனால் வேறு வேறு உடம்பை எடுத்து; அன்னமும் பன்றியுமாகிய உடம்புகளை யெடுத்து: “யாதவ குலத்துநெடு மாதவன் மருப்புடைய வேன மிரு கத்துருவமா, வேதமொழி பெற்றவய னோதிமமெ னப்பறவை வேடமுமெடுத் ததிலையோ, ஓதருணை வித்தகரை மூவரி லொருத்தரென வோதியிடு மற்பமதியீர், சீதமதி வைத்தமுடி பாதமல ரைச்சிறிது தேடுத மினைத்தபரமே” (அருணைக்கலம். 6.) உயிர்ப்பொறை சுமந்து - உடம்புகளைச் சுமந்து; பல பிறவியெடுத்து. நேடினர் - இறைவனைத் தேடினவர்களாய்.
(20-21) யாவரும் தம்மை வணங்குதலினால் தாம் நின்னையொப்பவர்களென்று இறுமாப்பையடைந்து தேவராக இருக்கும் சிலர். சிலர் - பிரம விஷ்ணுக்களாகிய இருவர் (105) “மூவரென்றேயெம் பிரானொடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேற், றேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதர்வரே” (திருவா. திருச்சதகம்.)
(22-27) யமன் தண்டனையாகவேனும் நின் திருவடியின் தொடர்புடையானாதலின் அவன் செய்த தவம் பெரிதென்பார். தொண்டர் - மார்க்கண்டேயர். நமனைப் பதகனென்றும் பொன்றினவனென்றும் கூறுங்கால் ஒருமையிற் கூறினவர், அவனது நறவத்தை வியக்குமிடத்து அவ்வியப் புணர்ச்சியால் நமனாரென்று பன்மையாற் கூறினார். “மேலு மறிந்தில னான்
|