நேரிசை வெண்பா 341. | நற்கரும்பு முக்கட் கரும்பென்னு நங்கைமீர் | | விற்கரும்பன் கைக்கரும்போ வேம்பென்னும் - சொற்கரும்பின் | | வாமக் கரும்பு மனைக்கரும்பா மாரூரர் | | |
கட்டளைக் கலித்துறை 342. | கரும்புற்ற செந்நெல் வயற்கம லேசர்கண் டார்க்குமச்சம் | | தரும்புற்றி னிற்குடி கொண்டிருந் தாரது தானுமன்றி | | விரும்புற்று மாசுணப் பூணணிந் தார்வெவ் விடமுமுண்டார் | | கரும்புற்ற கார்வரைத் தோகைபங் கான துணிவுகொண்டே. |
முகன் மேற்சென்று கீழிடந்து, மாலு மறிந்திலன் மாலுற்ற தேவழிபாடு செய்யும், பாலன் மிகைச்சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக், கால ன்றிந்தா ன்றிதற் கரியான் கழலடியே” (தே. திருநா.); “கொண்டசின மாதி குறையாதே தென்றிசைக்கோன், கண்ட விடத்துக் கழல்கட்டி” (திருவிடை மருதூருலா, 179) என்பன இங்கே நினைத்தற்குரியன.
341. செவிலித்தாய் கூற்று.
முதல் இரண்டடியும் தலைவி கூற்றைச் செவிலி கொண்டு கூறியது.
முக்கட் கரும்பே நல்ல கரும்பென்று கூறுவாள். இனிய பொருளாதலின் கரும்பென்றாள்; “கண்டங் கரியதாய் கண் மூன்றுடையதாம், அண்டத்தைப் போல வழகியதாம் - தொண்டர், உதலுருகத் தித்திக்கு மோங்கு புக ழொற்றிக், கடலருகே நிற்குங் கரும்பு” (பட்டினத்துப்பிள்ளையார் பாடல்.) விற்கரும்பன் கைக்கரும்போ வேம்பென்னும் - மன்மதனுடைய கையிலுள்ள வில்லாகிய கரும்பை வேம்பென்று கூறுவாள்; அதனை வெறுப்பாளென்றபடி (203.) விற்கரும்பனென்றது இதுகுறிமாத்திரையாய் நின்றது. சொல்லாகிய கரும்பினையுடைய இடப்பாகத்திலுள்ள கரும்புபோல்வாளாகிய உமாதேவி. மனைக்கரும்பு - இல்லக் கிழத்தி. ஆரூரரது காமத்தின் பொருட்டு அரும்பிய கரும்பு போல்வாளாகிய தலைவி. (பி-ம்.) ‘ஆரூரா’.
342. கரும்பைப்போன்ற நெல்லையுடைய வயல்; உற்ற : உவம உருபு; “கரும்பல்ல நெல்லென்ன” (பெரிய.), “நிலத்துக் கணியென்ப நெல்லுங்கரும்பும்” என்பவாதலின், கரும்புற்ற வயல், செந்நெல்வயலென்று கூட்டிப் பொருளுரைத்தலும் பொருந்தும். புற்றினிற் குடிகொண்டிருந்தார் : வன்மீகநாதராதலின் இங்ஙனம் கூறினார். மாசுணப்பூண் - பாம்பாகிய ஆபரணம். புற்றில் இருந்ததும் பாம்பையணிந்ததும் விடமுண்டதும் ஒரு மயில் அருகிலிருக்கும் தைரியத்தினாலேயாம் என்றார். சுரும்புற்ற கார்
|