எழுசீர்ச் சந்தவிருத்தம் 343. | கொண்டலை யலைத்தபல தண்டலை யுடுத்தழகு | | கொண்டக மலைப்ப தியுளார்க் | | கண்டபி னெனக்கிதழி தந்தன ரெனப்பசலை | | கண்டுயிர் தளிர்த்த மடவாள் | | அண்டரமு தொத்ததவமு தந்தனை யிருட்கடுவி | | தன்பரருண் மிச்சில் கொலெனா | | உண்டிடு முளத்தலவ ருண்குவரென் மிச்சிலென | | |
நேரிசை யாசிரியப்பா 344. | உமிழ்தேன் பிலிற்று மொள்ளிணர்க் கூந்தல் | | அமிழ்துகு மழலை யம்மென் றீஞ்சொற் | | சில்லரித் தடங்கண் மெல்லிய லொருந்தி |
கூந்தல்; சுரும்பு - வண்டு. வரைத்தோகை - மலைமகள். பங்கு ஆன - ஒரு பாதியாக இருக்கும். மயிலின் முன் பாம்பு அடங்குமென்பதை நினைந்து இங்ஙனம் கூறினார்; “ஒப்பிலா மயூர நேர்வார் ............ கருதிமுன் பார்த்தும்” (திருவால. 62 : 11.)
343.(சந்தக் குழிப்பு.) தந்தன தனத்தனன தந்தன தனத்தனன தந்தன தனத்த தன்னா.
தோழி கூற்று; செவிலி கூற்றுமாம்.
தலைவி காம மயக்கத்தாற் செய்யும் செயல்கள் கூறப்படும்.
தியாகப்பெருமானைக் கண்ட பிறகு அவரது பிரிவால் உண்டான பசலையைத் தனது மயக்கத்தால் அவரளித்த கொன்றைமலராக எண்ணி மகிழ்வாள். கொண்டலை - மேகத்தை. அலைத்த - ஊடுருவிச் சென்று வருத்திய. தண்டலை - சோலைகள். இதழி - கொன்றைப்பூ: இது பொன்னிறமுடையதாதலின் பசலைக்கு உவனமயாயிற்று.
உணவை விடமெனக் கருதிப்பின் விடம் எம்பிரான் உண்டதாதலின் அதனை உண்ணத்தகுமென்று உண்டவள், ‘என் நெஞ்சத்துள்ளே அவர் இருத்தலின் அவரும் இதனை உண்பர்; யான் உண்டது எச்சிற்படுதலின் அவர் உண்ணுதல் தகாது’ என்று மீட்டும் உமிழ்ந்து விடுவாள். அண்டரமுது ஒத்த அமுதம் - தேவாமுதத்தை யொத்த உணவு. இருட்கடு - இருளைப் போன்ற நிறத்தையுடைய விடம். அன்பர் - தியாகேசர். “நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல், அஞ்சுதும் வேபாக் கறிந்து” (குறள், 1128) என்பது இங்கே ஒப்புநோக்கற்குரியது.
344. இதில் முதல் 20 அடிகளில் ஒரு தலைவிக்கும் தலைவனுக்கும் மிடையே நிகழும் ஊடல் நிகழ்ச்சியைக் கூறுகின்றார்.
|