15 | கைம்மிகு சீற்றமுங் காதலு மலைப்ப | | வெள்ளப் புணர்ச்சியின் வேட்கையுள் ளடக்கி | | உள்ளப் புணர்ச்சிய ளூடின ணிற்பது | | தாதவிழ் தெரியற் சாக்கியர் பெருமன் | | காதலுட் கிடப்பக் கல்லெறிந் தற்றே | 20 | இத்திற மகளி ரிளைஞரோ டாடும் | | நித்தில மாட நீண்மறு குடுத்த | | மைம்மா முகிறவழ் மணிமதிற் கமலைப் | | பெம்மா னருமைப் பெருமா ளாயினும் | | ஊனுண் வாழ்க்கைக் கானவர் குருசில் | 25 | செஞ்சிலை சுமந்த கருமுகி லேய்ப்ப | | உண்டுமிழ் தீநீ ருவந்தன ராடிஉம் | | விருப்படிக் கொண்ட மிச்சிலூன் மிசைந்தும் | | செருப்படிக் கடிகள் செம்மாத் திருந்தும் | | தொல்புகழ் விசயன் வில்லடி பொறுத்தும் | 30 | அருந்தமிழ் வழுதி பிரம்படிக் குவந்தும் | | நள்ளிருள் யாமத்து நாவலர் பெருமான் |
(14-7) புணர்ச்சி - மெய்யுறு புணர்ச்சி. வெள்ளம் போன்ற வேட்கையை, உள்ளப் புணர்ச்சி - மனம் ஒத்து நிற்றல். நீற்றம் அலைத்தலின் மெய்யுறு புணர்ச்சியை ஒழிந்தாள்; காதல் அலைத்தலினால் உள்ளப் புணரைச்சியை உடையளாயினாள்.
(17-9) சாக்கியர் பெருமான் - சாக்கிய நாயனார். காதல் உட்கிடப்ப - சிவபெருமானிடத்து மெய்யன்பு உள்ளத்துள்ளே இருப்ப. கல் எறிந்தற்று - புறத்தே அன்பிலர் போல அவர் கல்லை எறிந்தாற் போன்றது. நிற்பது கல்லெறிந்தற்றென இயைக்க. உள்ளத்துள்ளே வேட்கையும் புறத்தே சினக்குறிப்பும் உடைமைக்கு இவ்வுவமை கூறினார்.
(21-3) மைம்மா முகில் - கரிய பெரிய மேகங்கள். (பி-ம்.) ‘தவழு மணிமதில்’. அருமைப் பெருமாள்; தியாகேசர் திருநாம்ம்; “வீறுதியா கப் பெருமாள் வீதிவிடங் கப்பெருமாள், கூறுமரு மைப்பெருமாள்” (திருவாரூர்க் கோவை, காப்பு.)
(24-8) கண்ணப்பருக்கு எளியரானமை கூறுவார். (பி-ம்.) ‘ஊனூண் வாழ்க்கை’. கானவர் குருசில் - கண்ணப்ப நாயனார். செஞ்சிலையாலும் கரிய நிறத்தாலும் நீரை உண்டு உமிழ்வதாலும் மேகம் அவருக்கு உவமையாயிற்று. சிலை - வில். விருப்பு அடிக்கொண்ட மிச்சில் ஊன் - அன்பை அடிப்படையாக்க் கொண்ட மிச்சிலாகிய ஊன். அடிகள் - ஸ்வாமியான நீர். செம்மாந்து - இறுமாந்து. விசயன் - அருச்சுனன்.
|