| தள்ளாக் காத றணித்தற் கம்ம | | பரவை வாய்தலிற் பதமலர் சேப்ப | | ஒருகா லல்ல விருகா னடந்தும் | 35 | எளியரி னெளிய ராயினர் | | அளியர் போலு மன்பர்க் டமக்கே. |
நேரிசை வெண்பா 345. | தம்மேனி வெண்பொடியாற் றண்ணளியா லாரூரர் | | செம்மேனி கங்கைத் திருநதியே - அம்மேனி | | மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரன் | | |
கட்டளைக் கலித்துறை 346. | தன்னொக்குஞ் செல்வக் கமலைப் | | பிரான்செஞ் சடாடவிமற் | | றென்னொக்கு மென்னி னெரியொக்குங் | | கொன்றை யெரியிலிட்ட | | பொன்னொக்கும் வண்டு கரியொக்குங் | | கங்கையப் பொன்செய்விக்கும் | | மின்னொக்கும் பொன்செய் கிழக்கொல்ல | | |
(29-36) நாவலர் பெருமான் - சுந்தரமூர்த்தி நாயனார். காதல் -பரவையாரிடத்துக் கொண்ட காதல். சேப்ப - சிவப்ப. அளியர் - இரங்கும் இயல்பினர்.
அருமைப் பெருமாளாயினும் (23) அன்பர்களுக்கு எளியரென்க,
345. தியாகேசப் பெருமானும் உமாதேவியாரும் முருகவேளும் சேர்ந்துள்ள காட்சி திருவேணி சங்கமத்தைப் போன்றுள்ளதென்பர்.
வெண்பொடி - திருநீறு. தண் அளியால் - குளிர்ந்த திருவருளால். செம்மேனியாயினும் வெண்பொடியால் வெண்ணிறமுடையதாகத் தோற்றியது. வெண்மையும் தண்மையும் கங்கைக்குரியன (319).) அம்மேனி மானே யமுனை - அழகிய திருமேனியையுடைய மானைப்போன்ற உமாதேவி யமுனையை ஒப்பாள்; நிறத்தால் நீலமாதலின் ஒப்புக் கூறினர். வாணிந்தி குமரன் - செந்ந நிறமுடைய முருகவேளே அந்நிறமுள்ள வாணிந்தியைப் போல்வான்; “செய்யன்” (முருகு. 206.) தான், ஏ : அசைநிலைகள். இங்ஙனம் மூன்று நதியும் சேர்ந்த திரிவேணி சங்கமமாக இருத்தலின் தனித்துக் குடைவேம்; குடைவேம் - ஆடுவேம். மூவரையும் ஒருங்கே தியானிப்பே மென்பது கருத்து. திரிவேணி சங்கமம் : 320.
346. சடாடவி - சடைத்தொகுதியாகிய காடு. அது நெருப்பை ஒக்கும்; “எரிமரு ளவிர்சடை” (புறநா. 56 : 1.) அச்சடையில் கண்ணியாய அணிந்த
|