பக்கம் எண் :

254குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
347.
வெண்ணிலவு கொழித்தெறிக்குஞ் செஞ்சடைமோ
   லியர்வீதி விடங்க ராரூர்க்
கண்ணுதல்பொற் புயவரைசேர் தனவரைக
   ளிரண்டவற்றுட் கனக மேரு
அண்ணல்புய வரைக்குடைந்து குழைந்துதலை
   கணங்கிடுநம் அன்னை பார
வண்ணமுலைத் தடவரையவ வரைகுழயப்
   பொருவதல்லால் வணங்கி டாதே.    
(40)

நேரிசை யாசிரியப்பா
348.
வண்டுகூட் டுண்ண நுண்டுளி பிலிற்றித்
தண்டே னுறைக்குந் தடமலர்ப் பொதும்பரின்
விழுக்குலை தெறிப்ப விட்புலத் தவர்க்குப்
பழுக்காய் தூக்கும் பச்சிளங் கமுகிற்
5
செடிபடு முல்லைக் கொடிபடர்ந் தேறித்

கொன்னறமலர் தீயில் ஆபரணம் செய்யும்பொருட்டு வைத்த பொன்னை ஒக்கும். அக்கொன்றையைச் சுற்றிய வண்டுகள் நெருப்புக்கருகிலுள்ள கரியை ஒக்கும். அருகிலுள்ள கங்கை ஆபரணத்தைச் செய்வித்தற்குப் பக்கத்தில் காத்திருக்கும் பெண்ணை ஒப்பாள். பொன் - பொன்னணி; ஆகுபெயர். மின் பெண். பிறை. வெண்ணிறத்தாலும் வளைந்திருத்தலாலும் நரையும் கூனும் உடைய கிழத்தட்டானை ஒத்தது; 334, 462.

    347. சிவபெருமானுக்குரிய தனவரைகள் இரண்டு. அவற்றுள் ஒன்று அவருடைய தோளால் குழையும்; மற்றொன்று அவர் தோளைக் குழைவிக்கும்.

    செஞ்சடை மோலியர் - சிவந்த சடையையே முடியாக உடையவர். புயமாகிய மலையிற் சேர்கின்ற. தனவரை - பொன்னாகிய மலை, ஸ்தனமாகிய மலை; சிலேடை. மேரு : எழுவாய். உடைந்து - தோற்று. வில்லானமை பற்றிக் குழைந்து தலை வசங்கிடுமென்றார். அங்ஙனம் வளைந்தமைக்கு, அவர் புயவரைக்குத் தோற்று வணங்கியதாக வேறொரு காரணங் கற்பித்தார் (310, 672.) அவ்வரை - அந்த தோளாகிய மலை. அம்பிகையின் தனத்தால் அவர் தோள் குழைந்தது; இது காஞ்சியில் நிகழ்ந்த நிகழ்ச்சி.

    348. இதில், முதல் 22 அடிகளில் சோலையில் நிகழும் காட்சியொன்றை வருணிப்பர்.

    (1-5) கூட்டுண்ண - கொள்ளையிட. உறைக்கும் - துளிக்கும். பொதும்பர் - மரச்செறிவு. தெறிப்ப - தெறிக்கும்படி. விட்புலத்தவர்க்கு - தேவர்க்கு. பழுக்காய் - பாக்கு. செடிபடு - செடியைப் போலப் பரவி வளர்ந்த.