| தலைவிரித் தன்ன கிளைதொறும் பணைத்து | | மறிந்துகீழ் விழுந்தந் நறுந்துணர்க் கொடிகள் | | நாற்றிசைப் புறத்து நான்றன மடிந்து | | தாற்றிளங் கதலித் தண்டினிற் படரவப் | 10 | பைங்குலைக் கமுகிற் படர்சிறை விரித்தொரு | | கண்செய்கூந்தற் களிமயி னடிப்ப | | நெடுந்தாண் மந்திகள் குடங்கையிற் றூக்கி | | முட்புறக் கனிக தாக்கிக் கொட்புறும் | | வானர மொன்று வருக்கைத் தீங்கனி | 15 | தானெடுத் தேந்துபு தலைமேற் கொண்டு | | மந்திக டொடர மருண்டுமற் றந்தப் | | பைந்துணர்க் கொடியிற் படர்தரு தோற்றம் | | வடஞ்சூழ்ந்து கிடந்த நெடும்பெருங் கம்பத் | | தணங்கனா ளொருத்தி யாடின ணிற்பப் | 20 | பெரும்பணை தாங்கி மருங்கினர் கொட்டக் | | குடந்தலைக் கொண்டொரு கூன்கழைக் கூத்தன் | | வடந்தனி னடைக்கும் வண்ணம தேயக்கும் | | பூம்பணை மருத்த் தீம்புனற் கமலைத் | | திருநகர் புரக்குங் கருணையங் கடவுள் |
(6-9) (பி.ம்) ‘தலைவிரித் தென்னக்’. தலைவிரித்தாற் போன்ற கிளை. கிளையென்றது கமுகமட்டையை. பணைத்து - பருத்து, மறித்து - மடங்கி; 348. கீழே விழுந்து. (பி-ம்.) ‘கீழ்விழுந்த நறுந்’. நான்றன மடிந்து - தொங்கினவாகி வளைந்து. தாறு இளங்கதலித்தண்டினில் - குலையையுடைய இளவாழை மரத்தில். வாழைமரத்தையே தண்டென்றார்; “தண்டித் தண்டிற்றாய்ச் செல் வாரும்” (பரி. 10 :100.)
(10-11) சிறை - சிறகு. கண்செய் கூந்தல் - கண்களையுடைய தோகையைப் பெற்ற.
(12-7) மந்திகள் - பெண்குரங்குகள். குடங்கை - உள்ளங்கை. முட் புறக்கனிகள் - பலாப்பழங்களை. கொட்புறும் - சுழன்று வரும். வருக்கைத் தீங்கனி - பலாப்பழத்தை. அந்தப்பைந்துணர்க் கொடியில் - கமுகமரத்திலிருந்து தாழ்ந்து வாழைமரத்தின்மேற் படர்ந்த முல்லைக்கொடியில்.
(18-22) வடம் - கயிறு. கம்பம் - தூண். பணை - பறை. கழைக் கூத்தன் - மூங்கிலின்மேல் ஏறி ஆடும் கூத்தாடி.
கமுகமரத்திற்கு நீண்ட கம்பமும், வாழை மரத்திற்குச் சூழ அடிக்கப்பட்ட முளைகளும், இடையே படர்ந்த முல்லைக் கொடிக்கு, முளைக்கும் தூணுக்கும் கட்டப்பட்ட வடமும், கமுகின்மேல் ஆடும் மயிலுக்குக் கம்பத்
|