பக்கம் எண் :

256குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

25
அன்பெனு மந்தரத் தாசை நாண் பிணித்து
வண்டுழாய் முகுந்தன் மதித்தனன் வருந்த
அருட்பெருங் கடலிற் றோன்றி விருப்பொடும்
இந்திரன் வேண்ட வும்பர்நாட் டெய்தி
அந்தமி றிருவொடு மரசவற் குதவி
30
ஒருகோ லோச்சி யிருநிலம் புரப்பான்
திசைதிசை யுருட்டுந் திகிரியன் சென்ற
முசுகுந் டனுக்கு முன்னின் றாங்குப்
பொன்னுல கிழிந்து புடவியிற் றோன்றி
மன்னுயிர்க் கின்னருள் வழங்குதும் யாமென
35
மேவர வழங்குமான் மன்ற
யாவரு நமர்கா ளிறைஞ்சுமின் மீரே.    
(41)

திருவாரூர் நான்மணி மாலை முற்றிற்று.


தின்மேல் நடிக்கும் பெண்ணும், பலாப்பழங்களைக் கையிலெடுத்துத் தாக்கும் மந்திகளுக்குப் பறை யடிப்பொரும், தலையிற் பலாப் பழத்தைக் கொண்டு முல்லைக் கொடியின்மேல் நடந்து செல்லும் வானரத்திற்குக் குடத்தைத் தலையிற் கொண்டு வடத்தின்மேல் நடக்கும் கழைக்கூத்தனும் உவமைகள். இந்நூலில் 656-ஆம் செய்யுளிலும் இத்தகைய காட்சியொன்று கூறப்படும்.

    (23-4) பணை - வயல். கடவுள் : எழுவாய்.

    (25-36) திருமாலினிடத்திலிருந்து தியாகேசர் இத்தலத்திற்கு எழுந்தருளிய வரலாறு கூறப்படும்.

    அன்பாகிய மந்தரமலையில் ஆசையாகிய கயிற்றைக் கட்டித் திருமால் கடைந்து வருந்த அருளாகிய பெருங்கடலில் அமுதம் போலத் தோன்றனார். இந்திரன் வேண்டுகோளால் தியாகப்பெருமான் தெய்வலோகம் சென்றார். அங்கிருந்து அவனால் தரப்பெற்று முசுகுந்தனுக்கு அருள்புரியப் பூவுலகத்துக்கு எழுந்தருளினார்.

    மதித்தனன் - கடைந்தனனாகி. உம்பர்நாடு - தேவலோகம். திகிரியன் - சக்கரவர்த்தியாய். மேவர - விரும்ப. கடவுள் (24) வழங்கும்; ஆல்: அசை.

    இங்கே கூறப்பட்ட செய்தியை, “பெருங்கண்ணன், செய்யுங் கருத்து முடித்த திருவுருவாய், உய்யுஞ் சுரரரசுக்குகோரரசாய் - எய்திய வண், பண்டு பணிப்பப் பணிந்து முசுகுந்தன், கொண்டு வரக்கமலை கோயிலா - ஒண்டொடிக்கை, மானுமொரு செவ்வேளு மானுமழு வுந்தரித்த, தானுமொரு சிங்காதனத்திருந்தோன்” (திருவாரூருலா) என்பதனாலும், திருவாரூர்ப் புராணம், கந்த புராணம் முதலியவற்றாலும் அறியலாகும்.