முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
ஆசிரிய விருத்தம் 349. | பொன்பூத்த குடுமிப் பொலங்குவட் டிமவான் | | பொருப்பிற் பிறந்துதவளப் | | பொழிநிலவு தவழுமுழு வெள்ளிவே தண்டத்தொர் | | போர்க்களிற் றைப்புணர்ந்து | | தென்பூத்த பாட்டளி துதைந்தபைங் கூந்தற் | | செழும்பிடி பயந்தளித்த | | சிறுகட் பெருஞ்செவிக் குஞ்சரக் கன்றினிரு | | செஞ்சரணை யஞ்சலிப்பாம் |
குறிப்பு: இந்நூலின் பெயர் முத்தையன் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர்ச் சேனாபதிப் பெருமாள் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர்க் குமாரதேவர் பிள்ளைக்கவி எனவும் ஏட்டுப் பிரதிகளிற் காணப்படுகின்றது.
349. (அடி, 1) இமவான் பொருப்பு - இமயமலை. இமயமலை பொன்னிறமுடையதாதலின், ‘பொன்பூத்த குடுமிப் பொலங்குவடு’ என்றார்; “பொற்கோட் டியம்” (புறநா. 2 : 24); “பனிமாலிமயப், பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமா, யிருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ்விருநிலமே” (யா. கா. 3.) வெள்ளி வேதண்டம் - கைலைமலை. களிறு: சிவபெருமான்.
(2) அளி - வண்டு. பிடி : உமாதேவியார். குஞ்சரக்கன்று - விநாயகக் கடவுள்.
(1-2) யானைக்குரிய இடம் மலைகள்; இமயமலையிற் பிறந்து கயிலையிலுள்ள களிற்றைப் புணர்ந்து ஒருபிடி பெற்ற குஞ்சரக் கன்று (198, 512.) மந்தர மலையிலுள்ள சித்திரசாலையில் எழுதப்பட்டிருந்த சிவப்பிரணவம் சத்திப் பிரணவமென்னும் மந்திரங்கள் முறையே ஆண்யானை பெண் யானைகளின் வடிவமாகத் தோன்ற அவற்றைக் கண்டு சிவபெருமானும்
|