பக்கம் எண் :

258குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

மின்பூத்த சிற்றிடைப் பேரமர்க் கட்கடவுள்
   வேழங் கடம்படுபடா
    வெம்முலைக் கோடுகொண் டுழுதுழு துழக்கமுகை
   விண்டுதண் டேன்றுளிக்கும்
கொன்பூத்த தெரியற் கடம்பணி தடம்புயக்
   குருசிலைப் பொருசிலைக்கைக்
    குமரனைக் கந்தபுரி முருகனைப் பரவுமென்
   கொழிதமிழ்க் கவிதழையவே.    
(1)

1. காப்புப் பருவம்

350.
பூமேவு கற்பகப் பொங்கரிற் செங்கட்
   புலோமசை வளர்த்தகும்பப்
புணர்முலைக் களியானை விளையாடு பன்னிரு
   பாருப்பனை விருப்பனைத்தும்

உமாதேவியாரும் அவ்வடிவங் கொண்டு சேர்ந்து, தேவர் முதலியோரது துன்பத்தைப் போக்குதற்பொருட்டு விநாயகக் கடவுளை ஈன்றனரென்னும் வரலாறு தோன்ற இங்ஙனம் கூறினார். இச்சரிதம்காஞ்சிப் புராணம், வலம்புரி விநாயகப் படலத்தால் அறியப்படும்.

    (3) கடவுள் வேழம் - தெய்வயானையம்மை, கடம் - குடம். படா - சாயாத. கோடு - யானைத்தந்தம்.

    (4) கொன் - பெருமை. கடப்பமரம் மாலையாகப் பூப்பதாதலின், ‘தெரியற் கடம்பு’ என்றார்; “துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை” (சிறுபாண். 69); இது முதலுள்ளு ஏற்ற அடை. கடம்பு - கடப்பமலர்; இது முருகக் கடவுளுக்குரியது; ஆகுபெயர். பொரு சிலைக்கை: முருகக் கடவுளுக்கு வில்லும் உண்டு; “அவுணர் முதறடிந்ததனி வில்லியை” (352); “பொறிவரிச் சாபமும்” (பரி. 5 : 65); “ஒருகை தனது வலக்குறங்கி னணங்கைத் தழுவி யுகளமுலை, மருவ வபய மொன்றாக வளர்தோல் வாள்சூ லங்குலிசம், பொருவேல் வாள்வில் கதைபுள்ளம் புயங்கோல் பத்துங் கரம்பத்தின், இருவு மாறு முகத்தேவ சேனாபதிசீ ரிழைப் போரும்” (தணிகைப். அகத்தியனருள்பெறு. 66.) கந்தபுரி : இத்தலத்தின் பெயர். கொழிதமிழ் : 196, 385-7.

    (முடிபு.) தமிழ்க்கவி தழையக் குஞ்சரக்கன்றின் செஞ்சரணை யஞ்சலிப்பாம்.

    350. (அடி, 1) பொங்கர் - சோலை. புலோமசை - இந்திராணி. புலோமசை வளர்த்த யானை : தெய்வயானை யம்மை (6.) கும்பம் போன்ற நகில்.