| கோமேவு சாரற் குறச்சிறுமி மேல்வைத்த | | குழகனைக் கழகந்தொறும் | | கொத்துமுத் தமிழ்மொய்த்த கந்தபுரி முத்துக் | | குமாரனைத் தனிபுரக்க | | தேமேவு கடவுட் பொலங்கிரி திசைக்கரிகள் | | திகிரிகிரி குலகிரியொடும் | | திரியத் திரித்துமத் தெறியத் தடங்கடற் | | றெண்டிரை முகட்டிதித்த | | பாமேவு மதுரம் பழுத்தமுத மொழுகும் | | பசுங்குதலை மழலையஞ்சொற் | | பங்கயச் செல்வியிரு கொங்கைக் குவட்டுவளர் | | |
சந்த விருத்தம் 351. | ஒருபு றத்துமர கதமி மைப்பவொளிர் | | மாமேரு மற்றொரு மேருவைச் சாய்த்தென | | உலக ளக்கநிமிர் வடபொ ருப்பையொரு | | தோளால்வ ளைத்தபி னாகியைத் தீக்கனல் |
பொருப்பு - மலைபோன்ற தோள். தேவியாரை யானையென்றதற்கேற்பத் தோள்களைப் பொருப்பென்றார்.
(2) குறச் சிறுமி - வள்ளி நாயகியார். குழகன் - இளமைப் பருவமுடையவன். கழகம் - கல்வி பயிலுமிடம். கொத்து முத்தமிழ் - முத்தமிழ் நூல்களின் தொகுதி; “முத்தமிழ்க் கொத்தியல் வல்ல, மற்றுள சங்கத்தவரும்” (திருவால. 15 : 5.) கொத்து முத்தமிழ் மொய்த்த கந்தபுரி : 390-94, 435-7. முத்துக் குமாரன். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளின் திருநாமம்.
(3) தே மேவு - தெய்வங்கள் விரும்பிய. கடவுட்பொலங்கிரி - மேருமலை. திசைக்கரி - திக்குயானைகள். (பி-ம்.) ‘திசைக்கிரிகள்’. திகிரிகிரி - சக்கரவாளகிரி. குலகிரி - குலாசலங்கள். மத்து - மேருவாகிய மத்து(6.)
(4) பங்கயச் செல்வி - திருமகள். குவடு - மலை. வளர் - துயிலும். பச்சைப் பசுங்கொண்டல் - திருமால் (3). கொண்டலென்று திருமாலைக் கூறியதற்கேற்ப நகில்களைக் குவடென்றார்.
(முடிபு.) பசுங்கொண்டல் முத்துக்குமாரனைத் தனி புரக்க.
351. (சந்தக்குழிப்பு) தனன தத்ததன தனன தத்ததன தானான. தத்தன தானனத் தாத்தன.
|