| குமர னைச்சமரி லுருமு கக்குளிறு | | காலாயு தக்கொடி யாளனைக் கோட்டிய | | குறுந கைக்குமன முருக வெற்பவர்த | | மானோடு மற்பொரு தோளனைத் தாக்கிய | | திரண்ம ருப்பினமர் பொருத னிக்கடவுண் | | மால்யானை யைப்புணர் காளையைச் சாற்றிய | | செழும றைப்பொருளி னுரைவி ரித்துமெனும் | | வேதாமு டித்தலை மோதுகைக் காய்ப்பொடு | | திருவ டித்துணையென் முடிப தித்தவடு | | அறத மெய்ப்புக ழாளியைப் பூட்டிய | | சிறைவி டுத்தமரர் குறைமு டித்துதவு | | சேனாப திப்பெரு மாடானைக் காக்கவே. |
வேறு 352. | குழைய டர்ந்துவடி கணைது ரந்துசெறி | | குமிழ்ம றிந்தவிழி நவ்வியைக் கோட்டொடு | | குவடெ றிந்தமுத கலசம் வென்றதட | | முலைசு மந்தமலை வல்லியைச் சேற்றொளிர் |
(4) மருப்பு : நகில். கடவுள்மால்யானை - தெய்வயானை யம்மை. காளை - பதினாறு பிராயமுடையவன் (தக்க. 5, உரை.) யானையைப் புணர் காளையென்றது ஒரு நயம். விரித்தும் - விரிப்போம். வேதா - பிரமதேவனது. கைக்காய்ப்பு - கையில் உள்ள வடு. திருவடித் துணை - இரண்டு திருவடிகளை. (பி-ம்.) ‘திருவடித் துணையின்’. என் தலையில் திருவடிகளை வைத்தமையால் உண்டான வடு; “தழுவுமையான் முன்னந் தமிழிறையாற் பின்னும், தொழுமிறையான்மேலுஞ் சுவடு - கெழுமுவகீழ், இன்றா லெனுங்குறைபோ மென்மனஞ்சேர் வாட்போக்கி, அன்றா லமர்ந்தாஅடி” (வாட்போக்கிக் கலம்பகம்) என்பது இங்கே நினைத்தற்குரிந்து. சிறை - சூரபன்மா அமைத்த சிறை. சேனாபதிப் பெருமாள் ; 378-79, 449.
(முடிபு.) சேனாபதிப் பெருமாடனைக் காக்க, வைத்தியநாதனைப் போற்றுதும்.
352. (சந்தக்குழிப்பு.) தனன தந்ததன தனன தந்ததன தனன தந்ததன தய்யனத் தாத்தன.
(அடி, 1) வடிகணை - வடிக்கப்பட்ட அம்பு. குமிழ் : மூக்கு; குழை .... விழி; “குழைபொருது நீண்டு குமிழ்மேன் மறியா ..... கருநெடுங்கண்
|