பக்கம் எண் :

262குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

குமுதம் விண்டசுவை யமுத முண்டினிய
   கொழுநர் கொஞ்சுசிறு கிள்ளையைத் தாட்டுணை
குறுகு தொண்டர்பிழை யறம றந்துபிறர்
   குணமி கழ்ந்ததக வில்லியைச் சேட்செலும்

எழுபெ ரும்புவன முழுதொ ருங்குதவும்
   இறைவி யென்றுமறை கையெடுத் தார்க்கவும்
இடைநு டங்குமட நடையி ளங்குமரி
   எனவி ருந்தகன கள்வியைப் பூத்தவென்
இதய புண்டரிக மலரி லெந்தையொடும்
   இனித மர்ந்தவொரு செல்வியைப் பாற்றொகும்
இருவர் கண்கள்கது வரிய செஞ்சுடரின்
   இடம ருங்குடைய தையலைப் போற்றுதும்

முழுது ணர்ந்துமுணர் வரிய தொன்றையொரு
   மொழியின் விண்டசிறு பிள்ளையைச் சூர்ப்பெயர்
முதுப ழம்பகையை யறவெ றிந்தவுணர்
   முதற டிந்ததனி வில்லியைப் பாட்டளி
முரல விண்டதரு நிழறொ ழும்புகுடி
   புகவ ழங்குகொடை வள்ளலைப் போற்றடி
முடியு மின்றிவெறு வெளிக டந்துமறை
   முடிவி னின்றுநிறை செல்வனைக் காத்தொறும்

போலுங் கயல்” (தண்டி. சூ. 31, மேற்.) நவ்வி - மான்போன்றவளை. கோடு - யானைத் தந்தம். குவடு - மலை. சேற்றொளிர் குமுதம், “தூம்புடை நெடுங்கை வேழம்” (சீவக. 232) என்றது போன்றது; சேற்றொளிர் : குமுதமென்றதற்கு ஏற்ற அடை; குமுதம் : கீழுதடு. பிறர் - தொண்டரல்லாதவரது. தகவில்லி - நடுதிலை பிறழ்ந்தவர்.

    (2) பால் தொகும் - பக்கத்திலுள்ள. இருவர் - திருமாலும் பிரமதேவரும். செஞ்சுடர் - சிவபெருமான் தையல்: இத்தலத்து அம்பிகையின் திருநாமம்; பாலாம்பிகை யென்று வடமொழியில் வழங்கும்.

    (3) ஒன்றை - பிரணவப்பொருளை. விண்ட - சிவபெருமானுக்குச் சொன்ன. அவுணர் முதல் - அசுரர் குலத்தை. தருநிழலில். தொழும்பு - அடியவரான தேவர்கள்; ஆகுபெயர். அடியும் முடியும் இன்றி. கா - சோலை.