| மழலை வண்டுதட மலர்கு டைந்துபுது | | மதுவ ருந்திநறு மல்லிகைச் சேக்கையின் | | வடிப சுந்தமிழி னிசைப யின்றபெடை | | யொடுது யின்றினிய செவ்வழிப் பாட்டினை | | வருவி பஞ்சிபயி றரும தங்கர்தெரு | | மரமு ரன்றுநெடு வைகறைப் போய்ச்செழு | | மலரி லஞ்சிதொறு முலவு கந்தபுரி | | மருவு கந்தனையெ மையனைக் காக்கவே. |
வேறு 353. | கடாமுமிழ் கைக்கதக் கிம்புரிக் கோட்டொரு | | கராசல மிட்டமெய்க் கஞ்சுகிக் கேற்பவொர் | | படாமணி மத்தகத் தந்தியைத் தீர்த்தர்கள் | | பராவரு கற்பகக் கன்றினைப் போற்றுதும் | | வடாதுபொ ருப்பினிற் றுன்றுபுத் தேட்கெதிர | | மனோலய முற்றமெய்ப் பண்பினைக் காட்டிய | | சடானன னைத்தலைச் சங்கம்வைத் தாற்றிய | | சடாயுபு ரத்தருட் கந்தனைக் காக்கவே. |
(4) தமிழினிசை பயின்ற வெடை : “வண்டு தமிழ்ப்பாட்டிசைக்குந் தாமரையே” (கம்ப. பம்பைப். 29.) செவ்வழி - மாலைக் காலத்துக்குரிய பண். விபஞ்சி - விணை. மதங்கர் - பாணர். இலஞ்சி - குளம்.
(முடிபு.) எம் ஐயனைக் காக்கத் தையலைப் போற்றுதும்.
353. (சந்தக் குழிப்பு.) தனாதன தத்தனத் தந்தனத் தாத்தன. (அடி, 1) யானைப் போர்வையை அணிந்த சிவபெருமானுக்கு ஒப்ப. கை -துதிக்கை. கிம்புரி - யானை தந்தத்திற்கு இடும் பூண். கராசலம் - யானை. கஞ்சுகி - சட்டையை அணிந்த சிவபெருமான்; கஞ்சுகம் - சட்டை. (பி-ம்.) ‘கஞ்சுகக் கேற்ப’.
(2) படாம் - முகபடாத்தை; முகபடாத்திற்கு யானைத் தோல் உவமை. கற்பகக் கன்று - கற்பக விநாயகர்; இத்தல விநாயகர்.
(3) வடாது பொருப்பு - மேருமலை புத்தேட்கு எதிர் - தேவர்களுக்கு எதிரே; புத்தேள் : சாதியொருமை. மெய்ப்பண்பினை - தமது உண்மை இயல்பினை; இச்சரித்ததின் விரிவைக் கந்தபுராணம், திருவிளையாட்டுப் படலத்தாலுணர்க.
(4) தலைச்சங்கம் இங்கே இருந்ததாகக் கூறப்படுவதுண்டு. சடாயுபுரம் : இத்தலத்தின் திருநாமம்.
(முடிபு.) கந்தனைக் காக்கக் கற்பகக்கன்றினைப் போற்றுதும்.
|