ஆசிரிய விருத்தம் 354. | பைங்காற் கமுகு செம்பழுக்காய்ப் | | பவள முதிர்ப்பக் கதிர்ச்செந்நெல் | | பனிமுத் துகுக்குஞ் சோணாட்டின் | | பரிசு பாடி ஞிமிறிரைப்பக் |
| கொங்கார்த் திறைக்கு நறைக்காந்தள் | | குறிஞ்சி மலரோ டணிந்தநறுங் | | குஞ்சிப் பெருமாள் வேதபுரிக் | | குமரப் பெருமா டனைக்காக்க |
| செங்காற் கருங்கட பைந்தொடியார் | | சிற்றாய்ப் பாடிப் பெருங்குடியில் | | தீம்பா றிருடிக் கட்டுண்டு | | திரியா வண்ணந் திருத்தாதைக் |
| கங்காப் படங்கப் பாறயிர்நெய் | | அருந்தேன் கடலோ டிருந்துண்ண | | அகிலம் படைத்துத் தனக்கேற | | |
(354. (அடி, 1) (பி-ம்.) ‘பைங்காய்க் கமுகு’. பழுக்காய் - செங்காய். பவளம்; உவமை. (பி-ம்.) ‘ஞிமிறிரப்ப’. உதிர்ப்பப் பாடி இரைப்ப. முத்தென்றது நெல்லை. முத்துப் பிறக்கும் இடங்களுள் நெல் ஒன்றாதலின் முத்தெனக் கொள்ளுதலும் பொருந்தும்.
(2-3) வேதபுரி: இத்தலப் பெயர். பெருங்குடி - ஆயப்பாடியிலுள்ளார் ஐந்து லக்ஷமென்பராதலின் பெருங்குடி யென்றார்.
(3-4) அங்காப்பு - உண்ணவேண்டி வாய்திறத்தல். பால் முதலிய ஒவ்வொன்றும் ஒரு கடலாக உள்ளது. ஏற - ஏறுதற்கு. அன்னம் - அன்னப் பறவை திருமாலுக்கு அன்னமொழிந்த பால் முதலியவற்றை யெல்லாம் படைத்துத் தனக்கு மிகுதியாக உண்ணம் அன்னத்தைப் படைத்துக்கொண்ட வென்றது ஒரு நயம்.
(முடிபு.) அன்னம் படைத்த பெருமாள், குமரப் பெருமாடனைக் காக்க.
|